நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ளது காரம்பாடு கிராமம். இங்கு ஓடைக்கரை சுடலை மாடசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொடை விழா நடப்பது வழக்கம். இந்த கொடை விழாவை வரிதாரர்கள் இணைந்து நடத்துவர். இவர்கள், இரண்டு தரப்பாக செயல்பட்டு வருவதால் இவர்களுக்குள் ஏற்கெனவே முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், இந்தாண்டு கொடை விழாவை முன்னிட்டு கரகாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை இரு தரப்பினரும் கண்டு களித்தனர்.
அப்போது சுவாமிக்கு பூஜை நடைபெற்றதால் கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால், இரண்டு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள், மற்றொரு தரப்பைச் சேர்ந்த சகோதரர்களாகிய மதிராஜன், மதியழகன், மகேஸ்வரன் ஆகிய 3 பேரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில், மதியழகன்னும் மதிராஜனும் உயிரிழந்தனர். கழுத்தில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொலைச் சம்பவத்தை பார்த்த ஊர் மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதனால், கொடை விழா பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து திசையன்விளை காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், ஒரே தெருவில் வசிக்கும் உயிரிழந்த சகோதரர்களின் தந்தை முருகன் மற்றும் முருகேஸ்வரி என்பவரின் குடும்பத்தினரிடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நிலப் பிரச்னையில் மீண்டும் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதத்தை மனதில் வைத்தே கோயில் திருவிழாவில் தகராறு செய்ததில் ஏற்பட்ட மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக முருகேஸ்வரியின் மகன்களான விபின்குமார், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் உயிரிழந்ததால் காரம்பாடு கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதனையடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் வீடு மற்றும் கொலையாளிகளின் வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88