திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் வந்த பெண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கிடமாக இருந்த நிலையில் அவர் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது, அதில் செயின், மோதிரம், பிரேஸ்லெட், வளையல் என 2,291 (2.2கிலோ) கிராம் 24 கேரட் மற்றும் 22 கேரட் கடத்தல் தங்கம் இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பெண் பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ. 1,53,000,00 என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88