பணத்தை பெருக்கும் முதலீட்டு ரகசியங்கள்… தெரிஞ்சுக்க ஈரோடு, திருப்பூருக்கு வாங்க?!

சம்பாதிக்கிறதெல்லாம் செலவுக்கே சரியா இருக்கே… இதுல எங்க சேமிக்கிறது, முதலீடு செய்றதுங்குற கவலை பெரும்பாலானவங்களுக்கு இருக்கு. இருந்தாலும், அதிகரிச்சுட்டே வர்ற இந்த விலைவாசி ஏற்றத்துக்கு இடையிலையும், பிள்ளைங்களோட படிப்புக்காக, அவங்களோட கல்யாணத்துக்காக அரும்பாடு பட்டு உழைச்சு எப்படியாச்சும் நாலு காசு சேர்த்துடணும்னு பெத்தவங்க நினைப்பாங்க.

வீட்டு உண்டியல்ல, வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டியில மாசாமாசம் பணத்தை சேமிக்கிறதால மட்டும் விலைவாசிக்கு தக்கபடி லாபத்தை எடுக்க முடியாது. மியூச்சுவல் ஃபண்ட்ல முதலீடு பண்ணனும். அப்போதான் எந்த தேவைக்காக முதலீடு பண்றோமோ அதுக்கான காசு லாபத்தோட கிடைக்கும்.

முதலீடு

ஈரோட்டில்..!

இதபத்தியெல்லாம் தெரிஞ்சுக்க நாணயம் விகடன் மற்றும் ஆம்ஃபி அமைப்பும் இணைஞ்சு ‘முதலீடுகளும் நீங்களும்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஈரோட்ல ஆகஸ்ட் 17-ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.30 வரை வி.சி.டி.வி 3-ஆம் குறுக்குச் ரோட்ல இருக்குற ரத்னா ரெசிடென்சியில நடக்குது.

இதுல நிதி நிபுணர், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் மற்றும் நிப்பான் இந்தியா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சந்தோஷ் ஜெகநாதன் ஆகியோர் கலந்துக்குறாங்க. அவங்ககிட்ட உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

திருப்பூரில்..!

திருப்பூர்ல 18-ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 10.30 மணி முதல் 12.30 வரை காங்கேயம் ரோட்ல, டிமார்ட்டுக்கு பக்கத்துல இருக்குற பொதிகை பவனில் நடக்குது. எல்லோரும் வாங்க.

இந்தக் கூட்டத்துல நிதி நிபுணர், எழுத்தாளர், சொற்பொழிவாளர் மற்றும் பயிற்றுநர் சோம வள்ளியப்பனும், நிப்பான் இந்தியா அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் சந்தோஷ் ஜெகநாதன் ஆகியோர் கலந்துக்குறாங்க. அவங்ககிட்ட உங்களுடைய மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த சந்தேகங்களை கேட்டு தெரிஞ்சுக்கலாம்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது. ஆனா https://bit.ly/AMFIIAP இந்த லிங்கை கிளிக் பண்ணி கட்டாயம் முன்பதிவு பண்ணனும்.