கடந்த திங்கள்கிழமை சென்னை பழவந்தாங்கலில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவா் ஒருவரின் பள்ளி புத்தக பையில், 50 கிராம் கஞ்சா கைபற்றப்பட்டது. இது குறித்து அந்த மாணவரிடம் விசாரித்ததில், பழவந்தாங்கல் ரயில் நிலையம் அருகே வாங்கியதாக தெரிவித்தாா். உடனே தலைமை ஆசிரியா், பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததின் அடிப்படையில், காவல்துறை அந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து எச்சரித்தனர். மேலும், மாணவருக்கு கஞ்சா விற்பனை செய்த நபர்களைத் தேடி வருகின்றனா்.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தமிழ்நாட்டில் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,“சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறிவருவதையும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல், சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் விடியா திமுக அரசை எச்சரித்துள்ளேன்.
நமது அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல்துறையை, எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக பயன்படுத்தும் விடியா தி.மு.க-வின் பொம்மை முதலமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த இனியாவது போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88