தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டம் கொத்தப்பள்ளி எனும் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகிறார்கள். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு மிளகாய்த்தூள் கலந்த உணவை மதிய உணவாக வழங்கியதாக பாரத ராஷ்டிர சமித கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஹரிதாஸ் ராவ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த பதிவில், பள்ளி மாணவர்கள் தங்கள் தட்டில் மிளகாய்த்தூள் கலந்த உணவை வைத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து, இது மனிதநேயமற்ற செயல் என்றும் இது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது என்றும், நாட்டின் வருங்கால தூண்களான மாணவர்களை அரசு பொறுப்பற்ற முறையில் நடத்துகிறது என்றும் இது காங்கிரஸ் அரசின் அலட்சியத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.
இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நிஜாமாபாத் மாவட்ட கல்வி அதிகாரி துர்கா பிரசாந்த் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டார். விசாரணையில்,`வெள்ளிக்கிழமை அன்று மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சுவையற்று இறந்ததால் சாப்பிடாமல் அவற்றை கீழே கொட்டியது தெரிய வந்தது.
இது குறித்து மாணவர்கள் ஆசிரியர்கள் இடத்தில் புகார் தெரிவிக்கவே, மாணவர்கள் மதிய உணவு உண்ண வேண்டும் என்பதற்காக உடனடியாக அவர்களுக்கு மிளகாய் பொடி மற்றும் எண்ணெய் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை உண்ட மாணவர்கள் பலருக்கு மறுநாள் வயிற்று கோளாறு பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. அவரது பெற்றோர்கள் மாணவர்களுக்கு மிளகாய் பொடி சாதத்தை எப்படி வழங்கலாம் என கேட்டு பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். என்ன பிரச்னை இருந்தாலும் மாணவர்களுக்கு மிளகாய் பொடி சாதம் கொடுத்தது என்பது தவறான ஒன்று!.
மதிய உணவு வழங்குபவர்களிடம் மாணவர்களுக்கு தரமான உணவை வழங்க வேண்டும் என அறிவுரை வழங்கி இருக்கிறோம் மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருக்கிறோம்” என மாவட்ட கல்வி அலுவலர் துர்கா பிரசாத் தெரிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88