`நிம்மதியே இல்லை… என்னை மன்னித்து விடுங்கள் அம்மா!’ – IAS தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவி தற்கொலை

தேசிய தலைநகர் டெல்லியில் கடந்த வாரம், கனமழையால் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள் நிறைந்த ராஜேந்திரா நகரில் வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியிலிருந்த ராவ் ஐ.ஏ.எஸ் அகாடமியின் தரைதளத்திலிருந்த நூலகத்தில் வெள்ள நீர் புகுந்ததால், அங்கு படித்துக்கொண்டிருந்தவர்களில் 3 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதையடுத்து, அந்தப் பகுதியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்களில் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகிவந்த பலரும் போராட்டத்தில் இறங்கினர்.

மாணவர்கள்

மறுபக்கம், அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது. கூடவே, பல்வேறு மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. டெல்லி உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இவ்வாறிருக்க, இதே டெல்லியில் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு, நான்காவது முறையாக ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அவர் கைப்பட எழுதிய தற்கொலைக் குறிப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அதில், ஐ.ஏ.எஸ் தேர்வில் தன்னால் முடிந்த அளவுக்கு முயற்சித்தும் தேர்ச்சி பெறமுடியாததின் வலியை விவரித்த அந்த மாணவி, “அம்மா, அப்பா என்னை மன்னித்துவிடுங்கள். உண்மையிலேயே நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன். பிரச்னை மட்டுமே இருக்கிறது, நிம்மதியே இல்லை. இந்த மன அழுத்தத்திலிருந்து வெளிவர அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், என்னால் அதிலிருந்து வெளிவர முடியவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தற்கொலை தடுப்பு மையம்

பின்னர் அவரின் மன அழுத்தம் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய அவரின் தோழி ஸ்வேதா, “அவர் மூன்று முறை ஐ.ஏ.எஸ் தேர்வில் முயற்சி செய்தார். தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தும் அவரால் தேர்ச்சி பெறமுடியவில்லை. இதனால், அவருக்கு மன அழுத்தம் அதிகரித்துக்கொண்டே சென்றது. தொடர்ச்சியாக சில மாதங்களுக்கு ஒரு முறை என வாடகை இந்தப் பகுதியில் அதிரித்துவந்ததால், பொருளாதார நெருக்கடியும் அவருக்கு ஏற்பட்டது” என்று தெரிவித்தார்.

தற்போது போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில், இந்த சம்பவம் தொடர்பான விவரங்களையும், இத்தகைய துயர சம்பவத்துக்கு வழிவகுத்த நிலைமையையும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88