தூத்துக்குடி: “மத்திய அரசே தேசியப் பேரிடராகத்தான் உள்ளது..!” – கனிமொழி காட்டம்

ஆர்.இ.சி லிமிடெட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழ்நாட்டில் வெள்ளம் வந்த போது ஏழு நாள்களுக்கு முன்பே நாங்கள் தெரிவித்தோம் என்று பிரதமர் மோடி சொன்னார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

ஆனால், உண்மை அது இல்லை என்று நமது முதல்வர் மக்களுக்கு நன்றாக தெளிவுபடுத்தியுள்ளார். இதே நிலைதான் இன்று கேரளாவில், ஏழு நாள்கள் முன்பு நாங்கள் தகவல் தெரிவித்து இருந்தோம். ஆனால், கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று நாடாளுமன்ற  அவையிலேயே கூறுகிறார்கள். அடுத்த நாளே கேரள முதல்வர் பினராய் விஜயன் ’இது உண்மைக்கு புறமானது’ என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்தியரசு உதவி செய்வதே கிடையாது.

’தகவல் தந்து விட்டோம், முன்னெச்சரிக்கை செய்துவிட்டோம், நடவடிக்கை எடுக்க அவர்கள் தயாராக இல்லை’ என்று மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  இதைத்தான் வழக்கமாக செய்து கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு, மாநில அரசுக்கு மாநிலங்களுக்கு தேவையான நிதி தந்தாக வேண்டும்.  

மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தமிழகத்தில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்பட்டபோது பலமுறை நிவாரண நிதி கேட்டும், முதல்வர் ஸ்டாலின் பிரதமர்  மோடிக்கு பல கடிதங்கள் எழுதியும்  எந்த பலனும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக எவ்வளவு நாள் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு நாள் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். நியாயமாக மத்திய அரசு நமக்கு தர வேண்டிய நிதி கொடுத்துதான் ஆக வேண்டும். மத்திய அரசு எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க தயாராக இல்லை. அவர்களே தேசிய பேரிடராகத்தான் இருக்கின்றனர். ” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88