கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் சூரல்மலா, முண்டகை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த ஜூலை 30-ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தன. பாலங்கள், வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன.
இவையெல்லாவற்றையும் விட, 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் மீட்புப் பணி நடைபெற்றுவருகிறது. இயற்கையின் கோர முகம் இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கேரளாவில் பசுவதை காரணமாகவே இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக பாஜகவை சேர்ந்த ராஜஸ்தானின் முன்னாள் எம்.எல்.ஏ கியான்தேவ் அஹுஜா சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த கியான்தேவ் அஹுஜா, “பசுவதை நடைபெறும் பகுதிகள் இத்தகைய சோகமான சம்பவங்களை எதிர்கொள்வதை 2018-ம் ஆண்டு முதல் நாங்கள் கவனித்து வருகிறோம். கேரளாவில் பசுவதை நிறுத்தப்படாவிட்டால் கேரளாவில் இதுபோன்ற அவலங்கள் தொடரும்.
அதேசமயம், உத்தரகாண்ட், இமாச்சலப்பிரதேசம் போன்ற பகுதிகளில் மேக வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. ஆனாலும், அங்கெல்லாம் இப்படியான அளவிலான பேரழிவுகளை அவை ஏற்படுத்தாது” என்று தெரிவித்தார். பாஜக முன்னாள் எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சு தற்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88