நெல்லை: மாட்டுவண்டிப் பந்தயத்தில் தகராறு; கல்லூரி மாணவரை ஓடஓட விரட்டி வெட்டிய கும்பல் கைது!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. ஆர்.ஓ.பிளான்ட் வியாபாரம் செய்து வருகிறார். இவரின் மனைவி பாலம்மாள். இவர், நெல்லை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். இவர்களது மகன் மாரிச்செல்வம். இவர், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு  தனியார் கல்லூரியில் இளநிலை வணிக நிர்வாகம் பாடப்பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு ஆகும்.

பாளையங்கோட்டை

கடந்த சில நாள்களுக்கு முன்பு வல்லநாட்டில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முத்து, மாட்டுவண்டிப் பந்தயத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், மாரிச்செல்வம் ஒலிபெருக்கியில் பேசியபடி மாட்டுவண்டிப் பந்தயத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். அப்போது பந்தயம் நடக்கும் சாலையில் பைக்கில் 2 பேர் குறுக்கே சென்றுள்ளனர். இதைப் பார்த்த மாரிச்செல்வம், சாலையில் இருந்து வெளியேறுமாறும், பந்தயத்திற்கு இடையூறு செய்யக்கூடாது எனவும் ஒலிபெருக்கியில் கண்டித்துள்ளார். இதில், மாரிசெல்வத்திற்கும் அந்த 2 பேக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே இதைப்பார்த்த ஊர் பெரியவர்கள், கோயில் விழாக்குழுவினர் அவர்களை சமாதானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு மாரிச்செல்வம் வழக்கம்போல கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். ஆனால், மாரிச்செல்வத்துடன் வாய்த்தகராறில் ஈடுபட்டவர்கள் அவரைத் தாக்க திட்டமிட்டு தினமும் மாரிச்செல்வத்தை பின் தொடர்ந்து நோட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில், வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மாரிச்செல்வத்தை 2 பைக்குகளில் வந்த 5 பேர் பின் தொடர்ந்தனர். கல்லூரி அருகில் வைத்து அந்த நபர்கள் மாரிச்செல்வத்தை அரிவாளால் வெட்ட சுற்றி வளைத்தனர்.

பாளையங்கோட்டை காவல் நிலையம்

அப்போது சுதாரித்துக் கொண்டவர், அவர்களிடமிருந்து தப்பியோடினார். இருப்பினும் அந்த நபர்கள் மாரிச்செல்வத்தை சாலையில் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.  இதைப் பார்த்த அப்பகுதியினர் அந்த நபர்களை தடுக்க முயலவே, அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.  இதில், மாரிச்செல்வத்திற்கு வெட்டுக் காயங்கள் ஏற்பட்டது. பின்னர், மாரிச்செல்வம் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல் நிலைய போலீஸார், இலங்காமணி, மீனாட்சி சுந்தரம், மகாராஜா, தம்பான், ராமசாமி ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88