`ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார்..!’ – ஜெகனை போதைப்பொருள் மாஃபியாவுடன் ஒப்பிட்ட சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசைக் கண்டித்து, டெல்லியில் ஒய்.ஆர்.எஸ்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன்மோகன் ரெட்டி போராட்டம் நடத்தினார். அப்போது,“சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி அரசு, எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பழி வாங்கும் செயலில் ஈடுபடுகிறது. நாங்கள் ஆட்சியிலிருந்த 5 ஆண்டுகளில் இதுபோன்று பழிவாங்கும் அரசியலில் ஈடுபட வில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்த 45 நாட்களிலேயே எங்கள் கட்சியைச் சேர்ந்த 35 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்” எனப் பேசினார்.

ஜெகன் மோகன் ரெட்டி

இதற்குப் பதிலளிக்கும் விதமாக சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது,“நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் நானும் ஒருவன். ஆனால் ஜெகன் ஆட்சியிலிருந்தபோது ஆந்திராவில் இருந்ததைப் போன்ற ஒரு சூழ்நிலையை நான் பார்த்ததில்லை. ஆந்திராவில் நடந்ததை ஒப்பிட ஒரே ஒருவர் மட்டுமே இருக்கிறார். அவர்தான் போதைப்பொருள் தலைவர் எஸ்கோபார். பாப்லோ எஸ்கோபர் ஒரு கொலம்பியா போதைப்பொருள் பயங்கரவாதி.

பின்னாளில் அவர் அரசியல்வாதியாக மாறியபின்னரும் போதைப்பொருள் விற்பனை செய்துவந்தார். 1970-களியிலேயே அவரின் சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலர். இப்போது அதன் மதிப்பு சுமார் 90 பில்லியன் டாலர். அவர் 1976-ல் கைது செய்யப்பட்டார். 1980-ம் ஆண்டு அவர் உலகின் நம்பர் ஒன் பணக்கார போதைப்பொருள் கடத்தல்காரர் ஆனார். முன்னாள் முதல்வர் நோக்கம் என்ன? டாடா, ரிலையன்ஸ், அம்பானியை விட பெரும் பணக்காரர் ஆகவேண்டும் என்பதுதான்.

சந்திரபாபு நாயுடு

சிலருக்குப் பணத் தேவைகள், சிலருக்குப் பேராசை, சிலருக்கு வெறி பிடித்திருக்கும். வெறி பிடித்தவர்கள்தான் இப்படியெல்லாம் செய்வார்கள். ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சியில் ஆந்திரப் பிரதேசம் கஞ்சா தலைநகராக மாறியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் கஞ்சா இப்போது எளிதாகக் கிடைக்கிறது. முன்னாள் முதல்வர் தனது ஆட்சிக் காலத்தில் ஒருமுறையாவது இந்தப் பிரச்னையை பேசியிருக்கிறாரா… மக்களை பயமுறுத்தித்தானே ஆட்சி செய்தார். 2022-ல் YSRCP MLC அனந்த சத்ய உதய பாஸ்கரின் ஓட்டுநர் கொலை செய்யப்பட்டதே ஜெகன் அரசாங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமைக்கு ஒரு எடுத்துக்காட்டு” எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88