தமிழ்நாட்டுக்கு ஜூலை 12 முதல் 31 வரை தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசோ அவ்வளவு தண்ணீர் திறந்துவிட முடியாது என மறுத்துவருகிறது.
இதனால், சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், உரிய தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துவதாகத் தீர்மானம் நிறைவேற்றினார். ஆனாலும், கர்நாடக அரசு தனது முடிவில் அப்படியே இருக்கிறது.
இவ்வாறிருக்க, காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவரும் நிலையில், தமிழகத்துக்குச் சேர வேண்டிய நீரைப் பெறுவதில் தமிழக அரசின் நடவடிக்கைகள்…’ என கேள்வி கொடுக்கப்பட்டு, `திருப்தியாக இருக்கிறது, போதாது, மெத்தனமாக இருக்கிறது’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி `அதிகபட்சமாக 50 சதவிகிதம் பேர் தமிழக அரசின் நடவடிக்கைகள் மெத்தனமாக இருக்கிறது’ என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 31 சதவிகிதம் பேர் போதாது என்றும், 19 சதவிகிதம் பேர் திருப்தியாக இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பட்ஜெட் குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ள பின்வரும் லின்கை க்ளிக் செய்யவும்