UPSC/TNPSC: குரூப் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? – மதுரையில் நடந்த பயிற்சி முகாம்

ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து நடத்திய UPSC/TNPSC Group -I, II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாம் மதுரையில் நடந்தது.

துணை கமிஷனர் கருன் கரட் ஐ.பி.எஸ்

அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அரங்கம் நிரையும் அளவுக்கு மாணவவர்கள் வந்திருந்தனர்.

மத்திய மாநில அரசுகள் நடத்தும் ஆட்சிப்பணி, அரசுப்பணிக்கான போட்டித்தேர்வுகளை எழுதி வெற்றி பெற ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது.

வந்திருந்த மாணவர்கள்

இன்று நடந்த பயிற்சி முகாமில் போட்டித் தேர்வுகளை யாரெல்லாம் எழுதலாம், எப்படி எழுதலாம், அதற்கான பயிற்சிகள், எடுக்க வேண்டிய முயற்சிகள், வழிகாட்டல்கள் குறித்து கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குநர் சத்யஸ்ரீ பூமிநாதன் எளிமையாகவும், தெளிவாகவும் பேசி மாணவர்களுக்கு வழிகாட்டி உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து மதுரை மாநகர காவல்துறை துணை கமிஷனர் கருன் கராத் ஐ.பி.எஸ் கலந்துகொண்டு, தான் UPSC தேர்வில் வெற்றி பெற்றது குறித்தும், மாணவர்கள் எப்படித் தயாராக வேண்டும், போட்டித் தேர்வில் வெற்றி பெற கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லை, பொருளாதார நிலை தடையில்லை என்று  உற்சாகமாகப் பேசி மாணவர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏறடுத்தினார். பின்பு மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்.

போட்டித் தேர்வு பயிற்சி முகாம்

வந்திருந்த மாணவர்களுக்கு பயிற்சிக் கையேடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி அரங்கில் வைக்கப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டது. பொருளாதார வசதி இல்லாமல் போட்டித் தேர்வு பயிற்சி எடுக்க விரும்பிய மாணவர்களுக்கு 100 சதவிகித ஸ்காலர்ஷிப்பும் வழங்கப்பட்டது. இம்முகாமில் கலந்துகொண்ட மாணவர்கள் உற்சாகமாக கிளம்பிச் சென்றனர்.