“பாஜக-வில் இணைந்தாலும், தினகரன் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்..!” – தங்கதமிழ்ச்செல்வன்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் மக்களுக்கு நன்றி தெரிவித்து வரும் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “டிடிவி தினகரனை விட 2 லட்சத்து 80 ஆயிரம் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன். மிக மோசமான ஓட்டுகளைத் தான் டிடிவி தினகரன் வாங்கியுள்ளார்.

தங்கதமிழ்ச்செல்வன்

ஆரம்பத்தில் பாஜகவையும், நரேந்திர மோடியையும் எதிர்த்து பயங்கரமாக அரசியல் செய்தார். ஆனால், தற்போது அந்தர் பல்டி அடித்து கூட்டணியில் நிற்கிறார். அவர் கட்சியை பாஜகவில் சேர்க்க போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பார்த்தேன்.

டிடிவி தினகரன் பாஜக-வுடன் தன்மானத்தை இழந்து சேர்ந்ததற்கு முக்கிய காரணம், ஃபெரா வழக்கு, இரட்டை இலை சின்ன வழக்கு என இரு வழக்குகளிலிருந்து விடுபடத்தான். அது எடுபடாது, அவர் தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். தண்டனைக்குப் பின் அவர் வந்து கட்சியை நடத்தட்டும் பார்க்கலாம்.

தங்கதமிழ்ச்செல்வன் , டி.டி.வி.தினகரன்

தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியை விட குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. சில சம்பவங்கள் நடந்ததுள்ளது வருந்ததக்கது தான், யாரும் மறுக்கவில்லை. தமிழ்நாடு முதல்வர் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து காவல்துறையினரை மாற்றி, புதிய உத்வேகத்துடன், புதிய சட்டங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி கொலை குற்றங்கள் இனி நடக்க கூடாது என நூறு சதவிகித தீர்மானத்துடன் திமுக அரசு நடைபெறுகிறது. இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காது.

சசிகலா எதற்கு சுற்றுப் பயணம் செய்கிறார் என தெரியவில்லை, அது அவர் கட்சிக்குள் உள்ள பிரச்னை, சுற்றுப்பயணம் மேற்கொள்ளட்டும் என்ன நடக்கிறது என பார்க்கலாம்…” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88