Tamil News Live Today: 5 ஆண்டுகள் பதவிக்காலம் இருந்தும், யு.பி.எஸ்.சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா!

யு.பி.எஸ்.சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி திடீர் ராஜினாமா! 

மகாராஷ்டிராவில் சமீபத்தில் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரி பூஜா கேட்கர் விவகாரத்தில் அவர் போலி சான்றிதழ்களை பயன்படுத்தி தேர்வானதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது மட்டுமல்லாமல், போலீஸ் எஃப்.ஐ.ஆர் என இந்த விஷயம் பெரிதாக வெடித்தது. பின்னர், யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வின் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், யு.பி.எஸ்.சி ஆணைய தலைவர் மனோஜ் சோனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதில், தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்திருப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

2017-ல் யு.பி.எஸ்.சி ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்த மனோஜ் சோனி, கடந்த ஆண்டு மே 16-ம் தேதி யு.பி.எஸ்.சி ஆணைய தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 2029-ல் தான் அவரின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில், தனிப்பட்ட காரங்களுக்காக என திடீரென பதவியை ராஜினாமா செய்திருப்பது விவாதப்பொருளாகியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88