சேலம்: நகைக்கடை உரிமையாளரிடம் நெருக்கம் – நடித்து மிரட்டி நகை, பணம் பறித்த இளம் பெண் – நடந்தது என்ன?

சேலம் சூரமங்கலம், ஜாகிர் அம்மாபாளையத்தை சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் ஒருவர், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் நகை கடை வைத்துள்ளார். இவரின் கடைக்கு சேலம் கருப்பூரை சேர்ந்த மோகனா என்பவர் நகை வாங்குவதற்காக சென்று உள்ளார். அப்போது நகை கடை உரிமையாளர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரின் செல்போன் நம்பரை வாங்கிய மோகனா, அடிக்கடி அவருடன் பேசி நகை என்ன விலைக்கு போகிறது என கேட்டு வந்துள்ளார். நாளடைவில் அவர்களின் நட்பு மிகவும் நெருக்கமானது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு நகைக்கடை அதிபருடன் பேசிய மோகனா வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதற்காக 15 பவுன் நகை வாங்க வேண்டும் என கூறி வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். உடனே டூவீலரை எடுத்துக் கொண்டு சேலம் ஜங்ஷனுக்கு சென்றார் அவர். அங்கு மோகனா டூவீலரில் நின்று கொண்டிருந்தார்.

பின்னர் அவரின் டூவீலரில் நகைக்கடை அதிபரை ஏற்றிக்கொண்டு கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீட்டில் யாரும் இல்லை. அப்போது இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்தபோது திடீரென வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார். `வீட்டில் யாரும் இல்லாததை பயன்படுத்தி எனது மனைவியுடன் கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருக்கிறாயா?’ எனக் கூறி தகராறில் ஈடுபட்டார். பின்னர் நகைக்கடை அதிபரை மிரட்டி அவர் அணிந்திருந்த 2 1/2 பவுன் நகையை பறித்ததுடன் google pay மூலம் ஒரு லட்சத்தையும் பறித்தார்.

கைது

இருவரும் தனிமையில் இருந்த போது ரகசியமாக புகைப்படத்தையும் எடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மிரட்டி அனுப்பி விட்டனர். இந்நிலையில் மோகனாவின் கணவராக சொல்லப்பட்ட வாலிபரோ அவ்வப்போது நகை கடை அதிபரை மிரட்டி பணம் கேட்டு டார்ச்சர் செய்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை அதிபர், சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய சூரமங்கலம் போலீஸார் இளம் பெண் மோகனாவை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து மிரட்டி பறித்த நகை பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கணவரைப் பிரிந்து இருக்கும் மோகனா வீரபாண்டி என்பவருடன் தொடர்பில் இருந்ததும், அவர் இரண்டாவது கணவர் என்பதும் போலீஸாரிடம் கூறினார். ஆனால் அது அது உண்மையான தகவல் இல்லை என்பதும், அவர் கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இது போன்று இருவரும் வேறு யாரிடமாவது பணம் பறித்துள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88