திமுக அமைச்சரும், முதலமைச்சர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராகப்போவதாக கடந்த சில நாள்களாகவே பேச்சுகள் அடிபட்டுவருகிறது. இந்த நிலையில், அதுபற்றிய பேச்சுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் இன்று பதிலளித்திருக்கிறார். முன்னதாக, இளைஞரணியின் 45 ஆண்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “கழகத்தில் பல அணிகள் இருந்தாலும், அதில் முதல் அணி இளைஞரணி. இந்த இளைஞரணிக்கு பிராண்ட் அம்பாசிட்டர் கழக தலைவர்தான். இன்று அவர் இவ்வளவு பெரிய பொறுப்புக்கு வந்ததற்கு இளைஞரணிதான் அடித்தளம் அமைத்தது.
அரசியல் களத்தில் மக்களைச் சந்திப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல சமூக வலைதளங்களும் இன்று முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக, பா.ஜ.க வெறும் பொய்களை மட்டுமே பரப்பி அரசியல் செய்கிறது. எனவே, சமூக வலைத்தளங்களில் இன்னும் ஆக்டிவாக இருக்கவேண்டும்.
முதலமைச்சருக்கு நான் துணையாக வரவேண்டும் என்று இங்கு பேசிய பலர் தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றனர். இதுபற்றிய கிசு கிசுக்கள், வதந்திகளைப் படித்துவிட்டு வந்து, இது நடக்கபோகுதோ… துண்டு போட்டு வச்சிடுவோம்னு பேசியிருக்கிறீர்கள். எந்த பொறுப்புக்குச் சென்றாலும் இளைஞரணி செயலாளர் பொறுப்புதான் மனதுக்கு நெருங்கிய பொறுப்பு என தலைவர் நிறைய முறை கூறியிருக்கிறார். எனக்கும் அதுதான். எனவே எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிட மாட்டேன்” என்றார்.
பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு கிளம்புகையில், `எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறந்துவிடமாட்டேன் என்று கூறியிருக்கிறீர்கள். அப்படியென்றால் பொறுப்புகள் மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?’ என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார். அதற்கு, “முதல்வர்தான் அதை முடிவெடுப்பார்” என்று உதயநிதி பதிலளித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88