UPSC/TNPSC: `மதுரையில் பயிற்சி முகாம்’ போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?

ஆனந்த விகடன், கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து ஜூலை 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாமை நடத்துகிறது. 

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் முக்கியமான போட்டித்தேர்வுகளை எழுதி வெற்றி பெற ஆனந்த விகடன், இப்பயிற்சியை அளிப்பதில் தமிழகத்தில் சிறந்த நிறுவனமான கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து பல ஆண்டுகளாக இந்த பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது.

பயிற்சி முகாம்

மதுரையில் வருகின்ற ஜூலை 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை தமுக்கம் அருகிலுள்ள அமெரிக்கன் கலை அறிவியல் கல்லூரியில் நடத்துகின்ற இலவச பயிற்சி முகாமில் மதுரை மாநகர காவல் ஆணையர் டாக்டர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ் உரையாற்றுகிறார்.

பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளையும், இரவு பகல் பாராமல் பணி செய்யும் காவல்துறையினரின் குறைகளையும் தீர்த்து வைப்பதோடு ஆதரவற்றவர்களுக்கு மறு வாழ்வு அளிப்பதிலும் அக்கறை காட்டி வரும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் டாக்டர் ஜெ.லோகநாதன், கடந்த 2002 ஆம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்ட ஏ.எஸ்.பி-யாக  பொறுப்பேற்று, பிறகு தர்மபுரி மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து சிபிசிஐடி, புதுக்கோட்டை, சென்னை என பல இடங்களில் எஸ்.பி-யாக சிறப்பாக பணியைத் தொடர்ந்தவர், தஞ்சாவூரில் டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டவர் அடுத்ததாக திருச்சி மாநகர காவல்துறை கமிஷனராக பொறுப்பேற்றார். பின்பு சென்னை போலீஸ் தலைமையகத்தில் கூடுதல் கமிஷனராக பணியாற்றி கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார்.

கமிஷனர் லோகநாதன்

பொறுப்பேற்றது முதல் மதுரை மாநகரின் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, குற்றங்களைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  லட்சக்கணக்கான மக்கள் கூடும் சித்திரைத் திருவிழாவை பிரச்னையில்லாமல் நடத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தார்.

இவர் சென்னையில் பணியாற்றியபோது காவல் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் ஆதரவற்றவர்களை, மன நலம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்தும், மரணமடைந்தவர்களை தன்னார்வளர்களுடன் சேர்த்து நல்லடக்கம் செய்ததற்காக உலக சாதனையாளர் விருது பெறக் காரணமாக இருந்தார். அதே சிஸ்டத்தை மதுரையிலும் செயல்படுத்தி வருகிறார்.

மதுரையில் புதன்கிழமைதோறும் குறை தீர்க்கும் முகாம் நடத்தி பொதுமக்களிடம் புகார்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறார். இன்னொரு பக்கம் காவல்துறையினரின் உடல் மற்றும் மன நலனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி  சிறப்பான மருத்துவ சிகிச்சைகளுக்கு ஏற்பாடு செய்து தமிழ்நாடு காவலர் நல நிதியிலிருந்து விரைந்து உதவி பெற்றுத் தருகிறார்.

மதுரை மாநகரில் இளைஞர்களை சீரழித்து வரும் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 18 வழக்குகளைப் பதிவு செய்து இருபதாயிரம் மாத்திரைகளை பறிமுதல் செய்தவர், தொடர்ந்து போதை மாத்திரை விற்பனை செய்தால் மருந்துக்கடை நடத்தும் உரிமை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். காவல்துறையினர் மற்றும்  அமைச்சுப் பணியாளர்களின் பிள்ளைகளின் கல்லூரிக் கல்விக்காக தமிழ்நாடு காவலர் நிதியிலிருந்து உதவித்தொகை பெற்றுக் கொடுப்பதிலும் முனைப்பு காட்டி வரும் மதுரை போலீஸ் கமிஷனர் டாக்டர் ஜெ.லோகநாதனின் உரை கேட்க  கிங்மேக்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் ஆனந்த விகடன்,  இணைந்து மதுரையில் நடத்தும் UPSC/TNPSC Group I,II தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி? என்கிற இலவச பயிற்சி முகாமில் கலந்துகொள்ள கீழ்கண்ட முறையில் விண்ணப்பிக்கவும்