Gold: தங்கம் விலை மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரூ.55,000-த்தை தாண்டியது!

கிட்டதட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு, ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.55,000-த்தை தாண்டியுள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார நிலை, சர்வதேச அளவிலான போர்கள், அமெரிக்காவின் பணவீக்கம், உலக நாடுகளில் நடந்த தேர்தல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை தங்கம் விலை தாறுமாறாக இருந்தது.

Gold: தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம்!

கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி முதன்முதலாக ஒரு பவுன் தங்கம் விலை ரூ.55,000-த்தை தாண்டியது. மே மாதம் முடிந்து ஜூன் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று குறையத் தொடங்கியது. ஆனால் ஜூலை மாதம் தொடங்கியதும் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகம் கண்டது.

அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.6,830-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.55,360-க்கும் விற்பனை ஆனது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து ரூ.6,920-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.720 உயர்ந்து ரூ.55,360-க்கும் விற்பனை ஆகி வருகிறது.

நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.100.50-க்கு விற்பனையாகி வருகிறது.