ஸ்ரீருத்ர ஹோமம்: உங்கள் குடும்ப நலனுக்காக நீங்களே அபிஷேகம் செய்து வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்!

வரும் 21 ஜூலை ஞாயிற்றுக்கிழமை நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு கோபூஜை தொடங்கி, ஸ்ரீருத்ர ஹோமம், அபிஷேகங்கள், ஆராதனைகள், திருமுறைப் பாராயணம் என பகல் 1 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளன.

ஸ்ரீருத்ர ஹோமம்

காலை, மதிய வேளைகளில் அன்னம்பாலிப்பும் நடைபெற உள்ளது. சின்ஹா விழாவுக்கு வருகை தரும் அன்பர்கள் தங்கள் கரங்களாலே ஸ்ரீஅன்பில் பிரியாள் உடனான ஸ்ரீஅண்டவானப் பெருமானுக்கு அபிஷேகித்து அருள் பெறலாம். உங்கள் குடும்ப நலனுக்காகவும் உலக நன்மைக்காகவும் நீங்களே ஸ்ரீருத்ர ஹோமத்தில் சங்கல்பமும் செய்து கொள்ளலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஏழை, எளியவர், பணக்காரர், ஆண், பெண், திருநங்கையர் என எந்த பேதமும் இன்றி இறைவனின் படைப்பில் சகல ஆன்மாக்களும் சிவாம்சமே என்ற அடிப்படையில் உருவானதே ஸ்ரீஅண்டவாணர் அருள்துறை வளாகத் திருக்கோயில். மக்களுக்காகவே உருவான இந்த திருமுறைக் கோயிலில் சிவனின் அடியார்களே முதன்மையானவர் என்ற கொள்கைக் கடைப்பிடிக்கப்படுகிறது. கோபூஜை தொடங்கி சகல பூஜைகளிலும் மக்கள் கலந்து கொண்டு பூஜித்து வழிபட்டு சிவனருள் பெறலாம் என்பதே இந்த ஆலயத்தின் சிறப்பு.

சிவனடியார்கள் தங்கள் குருநாதர் எனக் கொண்டாடும் சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள் கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவனடியார். சைவ மடத்துக் குருமார்கள் காட்டிய வழியில் சிவப்பணிக்காகவே தம்மையும் தமது குடும்பத்தினரையும் ஆட்படுத்திக்கொண்ட சிவசீலர். திருவாவடுதுறை திருமடத்தில் முறையாகச் சமயதீட்சை, விசேஷ தீட்சை முதலிய சிவதீட்சைகள் பெற்று அதன்படியே தனது வாழ்வைச் சிவத்தொண்டிற்காகவே அமைத்துக் கொண்டவர். ஆதீனங்கள் போற்றும் அருளாளர் இவர். இவரது சிவப்பணிகள் சைவ அடியார்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஸ்ரீருத்ர ஹோமம்

சேக்கிழார்பெருமான் காட்டியருளிய வழியில் இவர் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீசிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என முறையாக சிவாலய பரிவாரங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

நமது தர்மங்களையும் வழிபாடுகளையும் எளிய மக்களும் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்பதே இவரது குறிக்கோள். அதற்கேற்பவே இந்த அருள்துறையை அன்பர்களின் உதவியோடு நடத்தி வருகிறார். சமயக்குரவர் நால்வரை ஆட்கொண்டது நான்கு துறைகள்.

ஸ்ரீருத்ர ஹோமம்

துறை என்றால் கடலைக் கடக்க உதவும் படகேறும் இடம் என்று பொருள். அதுபோலவே இந்த பிறவிக் கடலைக் கடக்கவும் சில துறை கோயில்கள் உண்டு. அது நான்கு என்கிறது சைவம். அதன்படி அப்பருக்கு வீரட்டானத்துறை, சம்பந்தருக்கு தோணித்துறை, சுந்தரருக்கு வெண்ணைநல்லூர் அருட்டுறை, மாணிக்கவாசகருக்கோ திருப்பெருந்துறை. ஆனால் எளிய மக்களையும் பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இந்த ஸ்ரீஅண்டவாணர் அருள்துறை உதவும் என்று விண்ணப்பித்தே இந்த ஆலயம் உருவானது என்கிறார் சிவஸ்ரீ செந்தில்குமார் ஐயா.

ஸ்ரீருத்ர ஹோமம்

இத்தனை அற்புதமான அருள்துறையில் தான் வரும் 21 ஜூலை ஞாயிற்றுக்கிழமை நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 5 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு உங்களின் சகலவிதமான பிரார்த்தனைகளையும் விண்ணப்பித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.

ஸ்ரீருத்ர ஹோமம்

எத்தனையோ ஹோமங்கள் செய்தாலும் அதற்க்கெல்லாம் மேலான சிறப்பு வாய்ந்தது ஸ்ரீருத்ர ஹோமம். ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், அபிவிருத்தி, தீமைகள் ஒழிய நன்மைகள் பெருக ஸ்ரீருத்ர ஹோமம் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுவதும் அதில் கலந்து கொள்வதும் அவசியம் என்கிறார்கள் பெரியோர்கள்.

இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் பொசுங்கி, நன்மையான பலன்கள் உண்டாகும். மேலும் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ எதிர்பாரா விபத்துக்கள் ஏற்படுதல், மரண பயம் உண்டாதல், எதிரிகள் தொல்லை போன்றவற்றை நீங்குகிறது. பஞ்சாட்சர மந்திர பாராயணமும், பதிகம் ஓதுதலும், ஸ்ரீருத்ர மந்திர ஜபமும், ஸ்ரீருத்ர ஹோமமும் எந்தவித கிரக தோஷங்களையும் நீக்கிவிடும் என்பதை அறிந்திருப்பீர்கள். பிரச்னை என்று ஒன்று வந்தால் அதற்கு தீர்வு என்றும் ஒன்று இருக்கும். எனவே தோஷங்களால் கவலை கொண்டோர், இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

திருக்கோயில் தொடர்பு எண் – 98428 29392

ஸ்ரீருத்ர ஹோமம்

இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள இந்த QR CODE பயன்படுத்திக் கொள்ளவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி, மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan