திருச்சி திருவளர்ச்சோலையில் கடந்த 7 -ம் தேதி ஒருதலை காதல் விவகாரத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த நெப்போலியன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில், அந்த தாக்குதலில் படுகாயமடைந்த கதிரவன், சங்கர் குரு, கமலேஷ், ஜீவானந்தம் உள்ளிட்ட ஆறு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி கதிரவன் என்ற இளைஞர் உயிரிழந்தார். நெப்போலியன் உயிரிழந்த போது அவருடைய உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின்பு அவருடைய உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் கதிரவன் உயிரிழந்த காரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வகையில் போலீஸார் அரசு மருத்துவமனையில் குவிக்கப்பட்டனர். நெப்போலியன் கொலை செய்யப்பட்ட போது அது தொடர்பாக இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கல்லூரி பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்த பிரச்னையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் இருவர் அடுத்தடுத்து இறந்திருப்பது, அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88