கோவை: ‘அக்கா எங்க கடைக்கு வாங்க..!’ – பெண்களின் கையை பிடித்து அத்துமீறல்… 2 பேர் கைது!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள பெரியக்கடை வீதி, ஒப்பணக்கார வீதி, 5 கார்னர், மணிக்கூண்டு சுற்று வட்டாரம் மாநகரின் முக்கிய வியாபார மையமாகும். ஜவுளி, நகை, மளிகை, பேன்ஸி உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்.

கோவை டவுன்ஹால்!

இதனால் அந்தப் பகுதி எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும். வார இறுதிநாள்கள் மற்றும் பண்டிகை நாள்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

தங்களது கடைகளுக்கு வாடிக்கையாளர்களை அழைக்க, பல கடைகள் ஊழியர்களை வைத்துள்ளனர். அவர்கள் சாலையில் நின்று கொண்டு மக்களை வலுக்கட்டாயமாக தங்கள் கடைகளுக்கு இழுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

கோவை டவுன்ஹால்

அதிலும் சில ஊழியர்கள், சாலையில் செல்லும் பெண்களின் கையை பிடித்து இழுத்து அத்துமீறுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தினர். மக்களிடம் தொடர்ந்து அத்துமீறிய ஒரு இளைஞரை பெண் தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகியிருந்தது. விசாரணையில் தொழில்போட்டி காரணமாக மோதலில் ஈடுபட்ட உக்கடம் பகுதியைச் சேர்ந்த சர்தார் மற்றும் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மேரி ஆகியோரை காவல்துறை கைது செய்தனர்.

கைது

மக்களிடம் எல்லை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88