“பெற்றோர், மாமனார் மாமியாருடன் மகிழ்ச்சியாக இருக்க..!” – அஸ்ஸாம் அரசின் சிறப்பு அறிவிப்பு

அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமர்ந்த பிஸ்வா சர்மா அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் சிறப்பு விடுமுறையளித்து உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில்,“பெற்றோர் அல்லது மாமியார் மாமனார் ஆகியோருடன் நேரத்தை செலவிட ஏதுவாக மாநில அரசு ஊழியர்களுக்கு, 2 நாள் சிறப்பு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுப்பை வயதான பெற்றோருடன், மாமனார், மாமியாருடனும், அவர்களை கவனித்துகொள்ளவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தனிப்பட்ட கொண்டாட்டத்துக்காக பயன்படுத்தக் கூடாது.

ஹிமந்த பிஸ்வா சர்மா

வரும் நவம்பர் 6, 8 ஆகிய தேதிகளில் சிறப்பு விடுப்பு வழங்கப்படும். இதற்கு நடுவே, 7-ம் தேதி சத் பூஜை, 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்கள். எனவே, அரசு ஊழியர்கள் தொடர்ச்சியாக 5 நாள்கள் பெற்றோருடன் செலவிட வேண்டும். அத்தியாவசிய சேவை துறைகளைச் சேர்ந்தவர்கள் சுழற்சி முறையில் வேறு நாட்களில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். அதே நேரம் பெற்றோர் இல்லாதவர்கள், மாமியார் மாமனார் இல்லாதவர்களுக்கு இந்த விடுமுறை கிடையாது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88