விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி, நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஏப்ரல் 6-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பின்னர், நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு, `ஜூலை 10-ம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்’ என அறிவிக்கப்பட்டது. இதில் ஆரம்பத்திலேயே, தாங்கள் போட்டியிடவில்லை என அ.தி.மு.க அறிவித்துவிட்டது.
அதையடுத்து, தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 25-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இதில் போட்டியிட்டனர். இதற்கான வாக்குப் பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், 2021 சட்டமன்றத் தேர்தலில் பதிவான அதே 82 சதவிகித வாக்குகள், இந்த இடைத்தேர்தலில் பதிவாகியிருக்கிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க போட்டியிடாதது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் ஆகிய நிகழ்வுகள் அடங்கிய தேர்தல் களத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை நாளை காலையில் தொடங்குகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தொடர்பான உடனடித் தகவல்களுக்கு விகடன் டாட் காமில் இணைந்திருங்கள்!