`ஆம்ஸ்ட்ராங்… ஆருத்ரா… பாஜக’ – முதல்வரை சந்தித்த பின் திருமாவளாவன் சொன்னதென்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தலைமை செயலகத்தில் சந்தித்திருக்கிறார். பின்னர், `ஆம்ஸ்ட்ராங் கொலையில் பா.ஜ.க-வின் அரசியல் சதி திட்டம் இருக்கலாம்’ என்ற சந்தேகத்தை வி.சி.க கிளப்பியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

கள்ளச்சாராய மரணம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தமான விமர்சனங்களையும் கோரிக்கைகளையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்வைத்துவந்த நிலையில், ஜூலை 12-ம் தேதியான இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆம்ஸ்ட்ராங் கொலை, சட்டம் ஒழுங்கு, நீட் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் தொடர்பான கோரிக்கைகளை எடுத்துக் கூறியதாக சொல்கிறார்கள் வி.சி.க-வினர்.

சந்திப்புக்கு பின் பேசிய திருமாவளவன், “சட்டம் ஒழுங்கு குறித்து சில கருத்துகளை தமிழ்நாடு முதலமைச்சருடன் பகிர்ந்துகொண்டோம். பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி திட்டமிட்டவர்களை என அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தினோம்” என்றார். தொடர்ந்து பேசியவர், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்க பா.ஜ.க-வுக்கு செயல்திட்டம் இருக்கின்றன.

ஆம்ஸ்ட்ராங் கொலையிலும் அரசியல் செயல்திட்டம் இருப்பதாக விசிக சந்தேகப்படுகிறது. அவர் உயிரிழந்த சில நிமிடங்களில் சிபிஐ விசாரணை கேட்கிறது பா.ஜ.க. ஆருத்ரா நிறுவனத்தின் பெயரும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் அடிபடுகிறது. அந்த நிறுவனத்தினருக்கு பா.ஜ.க-வுக்குமான உறவு குறித்தும் ஒராண்டாக பேசப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலையும், ஆருத்ரா கனெக்‌ஷனும்

தி.மு.க அரசுக்கு எதிராக ஒரு பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்குலைக்கும் எண்ணத்தில்தான் பா.ஜ.க இருக்கிறது. அதற்கு துணைபோகும் விதமாக சில அமைப்புகள் செயல்படுகிறது.

திருமாவளவன்

முன்னாள் முதல்வர் கலைஞரை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது அநாகரித்தின் உச்சமாக இருக்கிறது. அவரை கொச்சை படுத்துவதன் மூலம் பதற்றத்தை ஏற்படுத்த பார்க்கிறார்கள். சட்டம் ஒழுங்கை சீரழிக்க சில சக்திகள் செயல்பட்டு வருவதை அறிந்து சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அண்மைகாலமாக வி.சி.க-வின் அணுகுமுறைகளை வைத்து தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வலம்வந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திருமாவளவன் நேரடியாக சந்தித்து பேசியிருப்பதும் குறிப்பிடதக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88