கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களை ஒட்டிய பகுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்து வந்தன. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த கொள்ளை சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்ட ‘ராட்மேன்’ என்றழைக்கப்படும் மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தலைமையிலான கும்பல் கோவை மாநகரத்தில் மட்டும் 18 கொள்ளை சம்பவங்களிலும், அதேபோல தமிழ்நாடு முழுவதும் 68-க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மூர்த்தி தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர். வயது 36. பட்டப்படிப்பு முடித்துவிட்டு சிறிது காலம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரின் மனைவி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மூர்த்தி கடந்த 2020ம் ஆண்டு முதல் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போதுதான் முதல்முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளை சம்பவங்களுக்கு ராட் மற்றும் ஒரே மாதிரியான உடைகளை பயன்படுத்துவதால் ராட்மேன் என்றழைக்கப்படுகிறார்.
சிசிடிவி கேமராக்களை தவிர்ப்பதற்காக ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்துள்ளனர். கொள்ளை சம்பவத்துக்கு வரும்போதும், செல்லும்போதும் பைக் அல்லது காரில் வராமல் பேருந்தில் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவரின் கேங்கில் ஏழு நபர்கள் உள்ளனர். அனைவரும் 30 வயதுக்குட்பட்டவர்கள். ஒருவேளை வீடுகளில் ஆட்கள் இருந்தால் நபர்களை கட்டிபோட்டு, கொள்ளையடித்து வந்துள்ளனர்.
கொள்ளை சம்பவத்தின்போது வெவ்வேறு மொழிகள் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் தகவல் பரிமாறிக்கொள்வார்கள். இதன் மூலம் ராஜபாளையம் பகுதியில் ரூ. 4.5 கோடி மதிப்பில் ஸ்பின்னிங் மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். சொகுசு கார், சூப்பர் பைக் என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். ரூ.1.5 கோடி மதிப்பில் 53 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார்.


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் சுமார் 1,500 சவரன் நகை கொள்ளையடித்துள்ளனர். மூர்த்தியுடன் அவரின் மனைவி மற்றும் கூட்டாளி அம்சராஜ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் சம்மந்தப்பட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும்