கோவை: போலீஸ் என்று மிரட்டி கடைக்காரர்களிடம் பணம் பறிப்பு; பாஜக முன்னாள் பிரமுகர் கைது

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 50). இவர் கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றி வந்தவர். சூதாட்ட கும்பலுடன் இணைந்து செயல்பட்டதால், கடந்த 2010-ம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட பாஜக தலைவருடன் பெருமாள்

தொடர்ந்து பாஜக-வில் இணைந்த பெருமாள், அந்தக் கட்சியில் சில பொறுப்புகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடைக்காரர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் பெருமாள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். சஃபாரி உடையுடன் கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று,

பாஜக எம்எல்ஏ நயினாருடன் பெருமாள்

“நான் போலீஸ் எஸ்.ஐ. நீங்கள் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பனை செய்கிறீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்துவிடுவேன்.” என்று மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.

முதல்கட்ட விசாரணையில் பெருமாள் துடியலூர் பகுதியில் உள்ள ஒரு கடைக்காரரை மிரட்டி ரூ.45,000, பேரூர் பகுதியில் ஒரு கடைக்காரரை மிரட்டி ரூ.15,000 பறித்தது தெரியவந்துள்ளது. மாதம்பட்டியில் உள்ள மற்றொரு கடைக்காரரையும் இதே பாணியில் மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

கைது

அவர் உடனடியாக  காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அங்கு விரைந்து சென்ற தொண்டாமுத்தூர் காவல்துறை பெருமாளை கைது செய்தனர்.