ஆனந்த விகடன் மற்றும் Kingmakers IAS அகாடமியும் இணைந்து  ஜூலை 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதுரையில் `UPSC/ TNPSC Group 1, 2 தேர்வுகளில் வெற்றி பெறுவது எப்படி?’ என்கிற தலைப்பில் இலவசப் பயிற்சி முகாமை நடத்துகிறது. 

Competitive Exams | போட்டித் தேர்வு

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் முக்கியமான போட்டித்தேர்வுகளை எழுதி வெற்றி பெறுவதற்கான பயிற்சி அளிப்பதில் தமிழகத்தின் தலைசிறந்த நிறுவனமான Kingmakers IAS அகாடமியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது ஆனந்த விகடன்.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த முகாமை நடத்தி வருகிறது. மதுரையில் வருகின்ற ஜூலை 21-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுரை தமுக்கம் அருகிலுள்ள அமெரிக்கன் கலை அறிவியல் கல்லூரியில் இந்த முகாம் நடைபெறுகிறது.

பயிற்சி முகாம்

இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மா.சௌ.சங்கீதா இ.ஆ.ப அவர்களும், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் ஐ.பி.எஸ் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.

ஜூலை 21-ம் தேதி காலை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதற்கு அனுமதி இலவசம்தான். ஆனால் முன்பதிவு அவசியம்!

இந்த முகாமில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறீர்களா? உடனடியாக கீழே இணைக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மை பூர்த்தி செய்யுங்கள் அல்லது இந்த எண்ணுக்கு (044 – 66802997) உடனடியாக மிஸ்டு கால் கொடுத்து முன்பதிவு செய்யுங்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.