சிங்காரச் சென்னை 5.0 திட்டத்தின் மூலம் சென்னை மாநகரை சர்வதேச நாடுகளில் உள்ள நகரங்களுக்கு இணையாக மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக பிரமாண்ட உணவு வீதிகளை (Chennai Food Street) அமைக்கலாம்.

பிரான்ஸின் தலைநகரான பாரிஸில் (Paris) உள்ள உணவுத் வீதிகள் (Food Streets) உலகப்புகழ் பெற்றவை. பல்வேறு கருப்பொருள் (Theme based Food Street) அடிப்படையில் அவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோலான தீம் பேஸ்டு உணவு வீதிகளை சென்னை அண்ணாசாலையில் உருவாக்கலாம்.

பாரிஸில் Rue Cler, Rue Mouffetard, Rue des Rosiers, Rue Saint-Dominique, Rue Sainte-Anne Rue du Bac போன்ற பிரெஞ்சு பெயர்களில் தனித்தனி கருப்பொருள்கள் அடிப்படையில் இந்த உணவு வீதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுவையும் தரமும்கொண்ட விதவிதமான உணவு வகைகள் அங்கு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகின்றன.

உணவு

நமது பழம்பெரும் காப்பியமான சிலப்பதிகாரத்திலேயே பொன்கடை வீதி, அறுவை வீதி, கூல வீதி, இரத்தினக் கடைத் தெரு எனக் கருப்பொருள் அடிப்படையில் வணிக வீதிகள் பிரிக்கப்பட்டிருந்தன. இவற்றை மனதில்வைத்து வெவ்வெறு கருப்பொருள்களைக் கொண்ட உணவுகளைப் பிரத்யேகமான பகுதிகளில் பிரித்து, பிரமாண்டமான சென்னை உணவு வீதிகளை (Chennai Food Street) நாம் உருவாக்கலாம்.

பாரம்பர்ய உணவு வீதி (Traditional Food Street):

தமிழ்நாட்டின் பாரம்பர்ய உணவுகளாக கம்பு, கேழ்வரகு, திணை போன்வற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை இங்கே பெற்று, உண்ணலாம்.

தெற்காசிய உணவு வீதி (South Asian Food Street):

சீன, ஜப்பான், தென்கொரிய உணவு வகைகளை உண்ணக்கூடிய உணவகங்கள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.

இனிப்பு, காரம் வீதி (Sweets and Savouries Food Street)

இங்கே நவீன தொழில்நுட்ப வடிவமைப்புகளுடன் கூடிய சர்வதேச பிராண்டுகளை கொண்ட கபேக்கள் (Cafe) அணிவகுத்து நிற்கும். பீட்ஸா, பர்கர், வாஃபில் போன்ற உணவுகளும் இனிப்பு, காரம் சார்ந்த உணவுகளை கொண்ட பேக்கரிகளும் இங்கே ஒருங்கே அமைக்கப்பட்டிருக்கும். அங்கே அமர்ந்து உண்ணலாம்.

கனவு

மீனுணவு வீதி (Fishermen’s Food Street) :

சென்னையில் மெரினா, பெசன்ட்நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைப் பகுதிகளில் கடல்சார் உணவுகள் தள்ளுவண்டிகளில் வைத்து, விற்பனை செய்யப்படுகின்றன. அதைத் தவிர்த்து பிற பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கடல்சார் உணவகங்கள் அரிதாகவே உள்ளன. அதை ஈடுசெய்யும் வகையில் இந்தத் தெருவில் சுகாதாரமான உலக அளவில் புகழ்பெற்ற மீன் உணவுகள் அனைத்தும் பல்வேறு சுவைகளில் கிடைக்கும் வகையில் பல்வேறு பிராண்டுகளை இங்கே கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பினரும் விரும்பும் உணவுகளில் மீனுக்கு முக்கிய இடம் உண்டு என்பதால், இந்தத் தெரு உணவுப் ப்ரியர்களின் இருப்பிடமாக மாறும்.

உலா உணவு வீதி (Dank Food Street) :

இங்கே உலக அளவில் புகழ்பெற்ற மதுபானங்களின் கடைகள் அணி வகுத்திருக்கும். அவற்றுடன் இணைந்த பார், உணவகம் உள்ளிட்டவற்றோடு வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக மது அருந்தும் வகையிலான தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்களும் அரசின் காவல்துறையின் காவலர்களும் அந்தப் பகுதியில் இருப்பர். 21 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே அந்தப் பகுதியில் அனுமதிக்கப்படுவர். மாலை முதல் நள்ளிரவு வரை மது அருந்த அங்கு அனுமதி அளிக்கலாம்.

இவ்வாறு கருப்பொருள்களின் அடிப்படையில் உணவு வீதிகளை குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்கப்படுவதால் எளிதில் அனைவரும் அணுகக்கூடிய இடமாக சென்னை உணவு வீதிகள் உருமாறும். இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைப்பதோடு, ஆண்டொன்றுக்கு கோடிக்கணக்கில் வருமானமும் ஈட்டித் தரும்.

சென்னை நிலவு கோபுரம் (Chennai Moon Tower)

இலங்கையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீலங்கா லோட்டஸ் டவர் (Sri Lanka Lotus Tower) போன்ற ஒன்றை சென்னை அண்ணாநகரில் அமைந்துள்ள கோபுரப் பூங்காவில் (Chennai Moon Tower) அமைக்கலாம்.

சென்னை அண்ணாநகரில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது கோபுரப் பூங்கா. சென்னையின் அடையாளங்களில் ஒன்றான சுமார் 150 அடி உயரம் கொண்ட டவர் பார்க் இங்கு உள்ளது. இந்த இடத்தைச் சீரமைத்து, சுமார் 1,200 அடி உயரம் கொண்ட சென்னை நிலவு கோபுரத்தை உருவாக்கலாம்.

கனவு

இந்த கோபுரம் நிலவு வடிவத்தில் உருவாக்கப்பட வேண்டும். இதில் ஏழு தளங்களை அமைத்து, ஒவ்வொரு தளத்திலும் உணவுக் கூடம், சுழலும் உணவகம் (Revolving Restaurant) திறந்த வெளி திரையரங்கம் (Open-air Theatre), குழந்தைகள் விளையாட்டு அரங்கம், சுமார் 500 பேர் அமர்ந்து நிகழ்வுகளை நடத்தும் வகையில் அரங்கு, இறுதியாக மேல் தளத்தில் வியூபாயின்ட் (View point), நிலவின் ஈர்ப்பு விசையை உணரும் வகையிலான அரங்கத்தை (Moon’s gravitational force Area) அமைக்கும்போது அது பலராலும் விரும்பக் கூடிய ஒரு சுற்றுலாத்தளமாக மாறிவிடும். இதைக் காண வருவோருக்கு கட்டணம் நிர்ணயத்து, வசூலித்தால் ஆண்டொன்றுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வாய்ப்பு அமைவதோடு சென்னைக்கும் பெருமை சேர்க்கும்.

(இன்னும் காண்போம்!)

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.