நெல்லை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தினமும் வெளி நோயாளிகளாக 3,000-க்கும் மேற்பட்டவர்களும், உள் நோயாளிகளாக 2,000-க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்கு உதவியாக வருபவர்கள் என பலரும் அரசு மருத்துவமனைக்கு பைக், ஆட்டோக்களில் வந்து செல்கின்றனர். பைக்குகளை அதன் உரிமையாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்துவது வழக்கம். இங்கு நிறுத்தப்படும் வாகனங்களை பாதுகாக்க மருத்துவமனை நிர்வாகம் சார்பில் காவலாளிகளும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
சமீப காலமாக இந்த பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்படும் டாக்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் பலரின் வாகனங்கள் திருடு போயின. இது தொடர்பாக பொதுமக்கள் நெல்லை அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பார்க்கிங் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மொபட்டில் வந்து ஒரு இளைஞர் பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு அங்கு சாவியுடன் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு பைக்கை திருடிச் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மொபாட்டை எடுத்துச் சென்றார்.
பின்னர் அடுத்தடுத்த நாட்களில் அதே இளைஞர் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த டாக்டர் உள்ளிட்ட பலரது பைக்குகளின் லாக்குகளை உடைத்து திருச் செல்வதும் பின்னர் அவரது பைக்கை எடுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன. இப்படியாக தொடர்ந்து 6 நாட்களும் அவர் திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதைக் கண்காணித்த மருத்துவமனை போலீஸார் பார்க்கிங் பகுதியில் சீருடை இல்லாமல் மப்டியில் நின்று கண்காணித்தனர். அதே இளைஞர், தென்காசியைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவர் தனது பைக்கை நிறுத்தி விட்டு மருத்துவமனைக்குள் சென்று விட்டு சிறிது நேரத்திலேயே வெளியேறினார். பார்க்கிங்கில் தனது பைக்கின் அருகில் ஒருவர் நிற்பதை கவனித்த அவர், லாக்கை உடைக்க முயன்றபோது பார்க்கிங்கின் காவலாளி மற்றும் அங்கு நின்ற பொதுமக்களின் உதவியுடன் அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்தனர்.
போலீஸாரின் விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் பிரபாகரராஜா என்பதும் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. “நான் ஒரு பொறியியல் பட்டதாரி. எனக்கு வேலை கிடைக்கல. செலவுக்கு பணம் தேவைப்பட்டதால் பைக்குகளை திருடினேன். ஆலங்குளம் பகுதியில் பழைய பைக்குகள் விற்பனை செய்யப்படும் கன்சல்டிங்க் கடைகள் நிறைய இருக்கு. திருடிய பைக்குகளை அங்கு கொண்டு விற்பனை செஞ்சுடுவேன்.” எனச் சொல்லி போலீஸாரையே அதிர வைத்திருக்கிறார். அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 5 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88