ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் இருக்கிறது. பிரான்சின் அதிபராக பதவி வகித்துவரும் இம்மானுவேல் மேக்ரோன், பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதாக அறிவித்தார். அதன் அடிப்படையில், ஜூன் 30-ம் தேதி 577 இடங்களுக்கான நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குபதிவும், ஜூலை 7-ம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவும் நடைபெற்றன.

Emmanuel Macron

முதற்கட்ட வாக்குப்பதிவில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்ற நிலையில், தீவிர வலதுசாரி ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வலதுசாரி கட்சிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இடதுசாரி முன்னணி கூட்டணி 180 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் செண்ட்ரிஸ்ட் கட்சி 160 இடங்களைப் பெற்று 2-வது இடத்துக்கும், ஆட்சியைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட வலதுசாரி கூட்டணி 140 இடங்களுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆட்சியமைக்க தேவையான 289 இடங்களை பிரான்சின் எந்தக் கூட்டணியும் பெறவில்லை என்பதால், இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து அதிபர் இமானுவேல் மேக்ரோனின் சென்ட்ரிஸ்ட் கட்சி புதிய கூட்டணி அரசை அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய கூட்டணி அரசு பொறுப்பேற்பதைத் தொடர்ந்து பிரான்ஸ் பிரதமர் கேப்ரியேல் அட்டல் (Gabriel Attal), இன்று ராஜினாமா செய்யப்போவதாகவும், புதிய அரசு அமையும் வரை, தேவையென்றால் இடைக்காலப் பிரதமராக தொடர தயார் என்றும் அறிவித்துள்ளார்.

france election result

ஆனால், அதிபர் இமானுவேல் மேக்ரான் புதிய பிரதமர் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிடப் போவதில்லை என்றும், புதிய அரசு அமையும் வரை காத்திருக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டி இன்னும் 3 வாரங்களுக்குள் தொடங்கவிருக்கும் நிலையில், பிரான்ஸின் இந்த புதிய அரசியல் சூழல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றியைத் தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகரின் Place de la République என்ற இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி வெற்றியைக் கொண்டாடினர். அப்போது சிலர் காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டதாகவும், அவர்களைக் கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லில்லில் பகுதியிலும், தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும், அங்கும் கண்ணீர் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கலவரத்தில் ஈடுபட்டதாக 25 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.