பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு பா.ஜ.க நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதனவர்கள்

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர், “இந்த இழப்பு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிகுந்த மானவேதனையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது… இந்த வடசென்னையில், கூலிப்படையை வைத்து நடக்கும் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டன. இதில் அரசியல் பின்புலம் இல்லை என இப்போதே அதிகாரிகள் கூறத் தொடங்கிவிட்டனர். இதை யார் தீர்மானம் செய்து தீர்ப்பு கூறுவது… தமிழ்நாட்டில் போலி சரக்குகளும், போலி சரண்டர்களும் அதிகரித்துவிட்டன. இன்னும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் பிடிபடவில்லை.

மிகவும் பலம்வாய்ந்த குற்றவாளிகள், சிறையிலிருந்தே குற்றத்தை செய்துகொண்டிருக்கிறார்கள். இதை அரசு ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறது. இது திராவிட மாடலா.. தினம் ஒரு கொலை மாடலா என்று எனக்கு தெரியவில்லை. நியாயம் கிடைக்க வேண்டும். இது மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்று. சிபிஐ விசாரணை தேவை. திருநெல்வேலியில், கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார். அந்தக் குற்றவாளிகளையே இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் அ.தி.மு.க-வை சேர்ந்தவர், நேற்று வி.சி.க-வை சேர்ந்தவர், இன்று பா.ம.க-வை சேர்ந்தவர் வெட்டப்பட்டிருக்கிறார்

தமிழிசை

அரசியல் கொலைகள் அதிகரித்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் இறுதி உரையை கேட்டால், அதில் ஆளும் கட்சியையும், முதல்வரையும், முதல்வரின் மகனையும் கடுமையாக சாடியிருக்கிறார். ‘நம்மை அந்தக் கட்சியில் சேர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள். நாம் அதில் சேரக் கூடாது’ எனப் பேசுகிறார். எனவே, இந்தக் கொலையில் அரசியல் பின்புலம் இருக்கிறது. முதலமைச்சரின் தொகுதியும் இந்த வட சென்னையில்தான் இருக்கிறது.

ஆனால் இந்த வடசென்னை, பல ஆராஜகத்துக்கு புகழிடமாக இருக்கிறது. இனியும் முதல்வர் தூங்குவதில் அர்த்தமில்லை. கள்ளக்குறிச்சிக்கு செல்லாதவர், இங்கு வராதவர்தான் இப்போதைய முதல்வர். இனி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதான் அரசியல் கொலையில் இறுதியானதாக இருக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.