கும்மிடிப்பூண்டி: வீட்டை இடிக்க மறுப்பு தெரிவித்து தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!
கும்மிடிப்பூண்டியில் பட்டா நிலத்திலுள்ள தனது வீட்டை இடிக்கக் கூடாது என மறுப்பு தெரிவித்து தீக்குளித்த ராஜ்குமார் என்ற இளைஞர், இன்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கரூர்: எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சிபிசிஐடி ரெய்டு!
ரூ.100 கோடி நில மோசடி புகார் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது போலீஸார், கொலை மிரட்டல் உட்பட 6 பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். தற்போது விஜயபாஸ்கர் போலீஸாரால் தேடப்பட்டு வருகிறார். அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, நிறுவனங்கள் என அவர் தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே அவருடைய ஆதரவாளர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.