ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி மனு; 9 மணிக்கு விசாரிக்கும் நீதிபதி!
சென்னை பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல், செம்பியம் பகுதியில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி பொற்கொடி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று 9 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
Armstrong: ஆம்ஸ்ட்ராங் – நேற்றைய தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த அரசியல் தலைவர்கள்!
.jpeg)
.jpeg)
.jpeg)



.jpeg)

.jpeg)
Armstrong: ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி; இன்று சென்னை வருகிறார் மாயாவதி! | Live
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை மாலை, பெரம்பூரில் பைக்கில் வந்த மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டார். பின்னர் உடனடியாக மீட்கப்பட்ட அவர், கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து, நேற்றைய தினம் அவருடைய உறவினர்களிடம் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் ஒப்படைக்கப்பட்டது.
அதையடுத்து, அவருடைய அயனாவரம் இல்லத்தில் நேற்றைய தினம் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளியில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னைக்கு வருகிறார். பெரம்பூரில் போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb