தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்து 240 இடங்களை மட்டுமே பெற்றது. இருப்பினும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (16 இடங்கள்), நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (12 இடங்கள்) ஆகியவற்றின் ஆதரவின் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களுடன் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது பா.ஜ.க.

மோடி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார்

மறுபக்கம், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களுடன் மக்களவையில் எதிர்வரிசையில் பலமாக அமர்ந்திருக்கிறது. அதில் குறிப்பாக, காங்கிரஸ் தனியாக 98 எம்.பி-க்களை தன்வசம் வைத்திருக்கிறது. இவ்வாறிருக்க, பா.ஜ.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிப்பொறுப்பேற்ற நாள்முதல், சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் விரைவில் கூட்டணியிலிருந்து வெளியேறுவார்கள், இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள்கூட முழுமையாக நீடிக்காது என எதிர்க்கட்சிகள் கூறிவந்தன.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியில் முக்கிய தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஆகஸ்டில் மோடி ஆட்சி கவிழும் என்றும், தேர்தலுக்கு தயாரா இருங்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.

பாட்னாவில் நேற்று நடைபெற்ற கட்சி நிறுவன நாள் நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய லாலு பிரசாத் யாதவ், “எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம் என்பதால், கட்சித் தொண்டர்கள் அனைவரும் தேர்தலுக்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். டெல்லியில் மோடி அரசு மிக பலவீனமாக இருக்கிறது. ஆகஸ்டில் அது கவிழக்கூடும்” என்றார்.

லாலு பிரசாத் யாதவ்

இதே மேடையில் பேசிய அவரின் மகன் தேஜஸ்வி யாதவ், “ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் அதிகாரப் பேராசையால் தங்களின் சித்தாந்தத்தோடு சமரசம் செய்துகொண்டு பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கின்றனர். ஆனால், நாங்கள் பா.ஜ.க-விடம் சமரசமோ, மண்டியிடவோவில்லை” என்றார்.

இத்தகைய பேச்சுகளுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய், `லாலு பிரசாத் யாதவ் பகல் கனவு காண்பதாக’ விமர்சித்தார். அதேபோல், பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, லாலு பிரசாத் யாதவை ஓய்வெடுக்க அறிவுறுத்தினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.