2024 ஜூலை 21-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத குருபௌர்ணமி நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஸ்ரீருத்ர ஹோமம்

‘புகை போட்டால் பகை ஒழியும்’ என்பது ஆன்றோர் வாக்கு. அதாவது வீட்டில் ஏதாவது சின்ன சின்ன தொந்தரவுகள் வந்தால், தூபமிட்டு இறைவனை வணங்கினால் அந்த தொந்தரவுகள் உடனே விலகி ஒழியும் என்பது பொருள். இதே பெரிய அளவிலான பிரச்னைகள் நீங்காது நம்மை விரட்டிவந்தால் அதற்கு பெரிய அளவில் ஹோம குண்டம் எழுப்பி நியமப்படி தீ வளர்த்து ஹோமம் செய்தால் அந்த பிரச்னைகளும் ஒழியும் என்பதே நம்பிக்கை.

ஒவ்வொரு கடவுளருக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு ஹோமம் செய்வது உண்டு. முன்பு ஒரு காலத்தில் 800க்கும் அதிகமான ஹோமங்கள் செய்யப்பட்டன என்கின்றன புனித நூல்கள். அவை அத்தனைக்கும் தலைமையான சிறப்பு ஹோம வழிபாடாக விளங்கியது ஸ்ரீருத்ர ஹோமம். கேட்ட அத்தனை வரங்களையும் தரக்கூடியது இந்த ஸ்ரீருத்ர ஹோமம். ஆண்டில் ஒரு முறையேனும் ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பம் செய்து கொண்டால் எல்லாம் வல்ல இறைவன் அருளை அளித்து அந்த வீட்டில் சுபீட்சமும் சௌக்கியமும் பெருகும் என்பது நம்பிக்கை.

ஈசனின் திருவடிவங்களில் முக்கியமான ஸ்ரீருத்ரனை ஆராதிக்கும் ஹோமம் ஸ்ரீருத்ர ஹோமம், இது அச்சம் மற்றும் கவலையைப் போக்கி, சகலரின் பாதுகாப்பை அளிக்க வல்லது. ஈசனின் அருளால், இக பர இன்பங்களை அள்ளித் தரக் கூடியது இந்த ஹோமம். நவக்கிரகங்களை சாந்தப்படுத்தி, அதன் மூலம் வரும் தோஷங்களை நிவர்த்தி செய்து, ஜாதகருக்கு நன்மைகளை அதிகரிப்பதற்காகவும் இது செய்யப்படுகின்றது.

ஸ்ரீருத்ர ஹோமம்

தேவையற்ற மன இருளை அகற்றி, தீய விளைவுகளை அழிக்க வல்லது. ஸ்ரீருத்ர ஹோமத்திலிருந்து எழும் நன்மைமிகுந்த ஆற்றல்கள் உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்கும் ஆற்றல் படைத்தவை. எதிர்மறைத் தாக்கங்களைப் போக்கி, தீய சக்திகளை அழித்து, அமைதியை அளிக்கக் கூடியவை. சுருங்கச் சொல்லின் இந்த ஹோமத்தில் பங்கு கொள்வதால் பயம், கவலை போன்றவை நீங்கி, ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி, ஐஸ்வர்யம் யாவும் பெருகும் என்பது உறுதி.

எனவே வாசகர்கள் நலமும் வளமும் பெற 2024 ஜூலை 21-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத குருபௌர்ணமி நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீஅண்டவாணர் பெருமான் கோயிலில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது. எத்தனையோ ஹோமங்கள் செய்தாலும் அதற்க்கெல்லாம் மேலான சிறப்பு வாய்ந்தது ஸ்ரீருத்ர ஹோமம். 2024 ஜூலை 21-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆடி மாத குருபௌர்ணமி நாளில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் காலை 10 மணி முதல் ஸ்ரீருத்ர ஹோமம் நடைபெற உள்ளது.

ஸ்ரீருத்ர ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சிவஸ்ரீ செந்தில்குமார் அவர்கள் கோவை ஆர்.எஸ். புரத்தில் வசிக்கும் சிவனடியார். சைவ மடத்துக் குருமார்கள் காட்டிய வழியில் சிவப்பணிக்காகவே தம்மையும் தமது குடும்பத்தினரையும் ஆட்படுத்திக்கொண்ட சிவசீலர். திருவாவடுதுறை திருமடத்தில் முறையாகச் சமயதீட்சை, விசேஷ தீட்சை முதலிய சிவதீட்சைகள் பெற்று அதன்படியே தனது வாழ்வைச் சிவத்தொண்டிற்காகவே அமைத்துக் கொண்டவர். இவரது சிவப்பணிகள் சைவ அடியார்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றவை.

சேக்கிழார்பெருமான் காட்டியருளிய வழியில் இவர் தனக்குச் சொந்தமான பூர்வீக இல்லத்தையே அண்டவாணர் அருட்துறை என்ற பெயரில் கோயிலாக அமைத்துள்ளார். இங்கருளும் அம்மையப்பருக்கு ஸ்ரீஅன்பில்பிரியாள் அம்மை சமேத ஸ்ரீ ஸ்ரீ அண்டவாணர் பெருமான் என்பது திருநாமம். இவர்களுடன் மிகப்பெரிய வடிவில் ஸ்ரீ சிவகாமி உடனாய ஞானக்கூத்தப் பெருமான், சோமாஸ்கந்தர், மற்றும் 63 நாயன்மார்கள் என முறையாக சிவாலய பரிவாரங்களைப் பிரதிஷ்டை செய்து நித்ய வழிபாடுகளை நிகழ்த்தி வருகிறார்.

ஸ்ரீருத்ர ஹோமம்

சமூகத்தில் அடித்தட்டு மக்களையும் நமது சனாதன வழிபாட்டு முறைகள் போய் சேர வேண்டும் என்பது இவரது விருப்பம். எவ்வித ஜாதி மத இன வேறுபாடுகளும் இல்லாமல் ஆண், பெண், திருநங்கை எவராயினும் நேரடியாகவே தமது கரங்களால் இறையுருவை மலர்சாற்றி வழிபடலாம் என்பதுதான் அருட்துறையின் சிறப்பம்சமே. இங்கு விசேஷ காலங்களில் அடியார்கள் தாமாகவே முன்வந்து வழிபாட்டு பணிகளைப் பகிர்ந்து கொண்டு செய்கிறார்கள். எனவே பெரியவர், தாழ்ந்தவர் என்கிற வேறுபாடு கிடையாது.

அனைவரும் ஒருமித்து திருமுறைப்பாராயணம் நிகழ்த்துவது இங்கு கூடுதல் சிறப்பு. மேலும் இங்கு வரும் அடியார்கள் தினசரி நிகழ்த்தப்படும் கோபூஜை மற்றும் அஸ்வ பூஜைகளைத் தாமே செய்யலாம். இங்கு தினசரி அன்னதானமும் உண்டு. அன்றாடம் பணிக்கு செல்பவர்கள், அரசு அதிகாரிகள், பிற துறை அலுவலர்கள், பள்ளி மாணாக்கர்கள், தொழிலாளர்கள் என பல நிலைகளில் உள்ளவர்களும் இங்கு வந்து தங்களால் இயன்ற மலர்களைச் சாற்றி தீபமேற்றி வழிபட்டுச் செல்வதை காலையிவிருந்து இரவு வரை காண இயல்கிறது.

நடராஜப்பெருமானுக்கு திருமஞ்சனங்களை முறையாக நிகழ்த்தி ரதத்தில் திருவீதியுலா செய்விப்பதையும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். 63 நாயன்மார்களுக்கும் முறைப்படி குருபூஜைகளை விடாது நிகழ்த்தி வருகிறார். தவிர தெய்வச் சேக்கிழார், சமயக்குரவர்கள், சந்தானக் குரவர்கள், அருணகிரியார், திருமூலர், வள்ளுவ நாயனார், ஒளவையார், திருவள்ளுவர் என குருபூஜை வழிபாடுகளுக்கு இங்கு நாள்தோறும் பஞ்சமே இல்லை. தினசரி சிவ வழிபாட்டிற்கான பசுக்கள், குதிரை, திருநீறு, பஞ்சகவ்யம் முதலிய தேவைகளுக்காக கோசாலை ஒன்றையும் பராமரித்து வருகிறார்‌.

ஸ்ரீருத்ர ஹோமம்

தற்பொழுது மரத்தேர் ஒன்றைச் செய்வதற்கான திருப்பணியைத் தொடங்கி நடத்திக் கொண்டுள்ளார். இப்பகுதியில் வாழும் அடித்தளத்து மக்களில் பெரும்பாலோனோர் இந்த புனிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது ஆச்சரியமான விஷயம். எவ்விதமான பலனையும் எதிர்பாராத இந்த கோயிலில் எல்லா பலன்களையும் அளிக்கக் கூடிய இந்த ஸ்ரீருத்ர ஹோமம் குரு பௌர்ணமி நாளில் நடைபெற உள்ளது.

இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தினால் உங்களின் பூர்வ ஜென்ம பாவங்கள் பொசுங்கி, நன்மையான பலன்கள் உண்டாகும். மேலும் உங்களுக்கோ அல்லது உங்களை சார்ந்தவர்களுக்கோ எதிர்பாரா விபத்துக்கள் ஏற்படுதல், மரண பயம் உண்டாதல், எதிரிகள் தொல்லை போன்றவற்றை நீங்குகிறது. பஞ்சாட்சர மந்திர பாராயணமும், பதிகம் ஓதுதலும், ஸ்ரீருத்ர மந்திர ஜபமும், ஸ்ரீருத்ர ஹோமமும் எந்தவித கிரக தோஷங்களையும் நீக்கிவிடும் என்பதை அறிந்திருப்பீர்கள். பிரச்னை என்று ஒன்று வந்தால் அதற்கு தீர்வு என்றும் ஒன்று இருக்கும். எனவே தோஷங்களால் கவலை கொண்டோர், இந்த ஸ்ரீருத்ர ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

இந்த ஹோமத்தில் கலந்து கொள்ள இந்த QR CODE பயன்படுத்திக் கொள்ளவும்.

ஸ்ரீருத்ர ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விசேஷ ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும்(தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.