நீதிமன்றம் அதிரடி உத்தரவு – சரணடைந்தார் MyV3Ads நிர்வாக இயக்குநர்!

விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்கும் என்று கோவை MyV3ads நிறுவனம், நூதன மோசடியில் இறங்கியது. இதுகுறித்து முதலில் கோவை மாநகர சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு எதிராக அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

MyV3Ads நிறுவனம்

தொடர்ந்து அந்த நிறுவனத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதன் நிர்வாக இயக்குநர் சக்தி ஆனந்தன், விஜயராகவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சக்தி ஆனந்தன் சிறையில் இருந்து வந்தப்பிறகும், அந்த நிறுவனம் குறித்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு விசாரணை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்க்கு மாற்றப்பட்டது.

தள்ளுபடி

இதனிடையே சக்தி ஆனந்தன் முன் ஜாமீன் கேட்டு, சென்னை டான்பிட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் சக்தி ஆனந்தனை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அவர்  நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

MyV3Ads சக்தி ஆனந்தன்

அவருக்கு வருகிற 19ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சக்தி ஆனந்தன் சிறையில் முதல் வகுப்பு கேட்டுத் தாக்கல் செய்த வழக்கு வருகிற 9ம் தேதி விசாரணைக்கு வருகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88