திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இருக்கிறது ஆங்கரை. இங்குள்ள வ.உ.சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவரும், ஆதிகுடியைச் சேர்ந்த ராஜா என்கிற கலைப்புலி ராஜாவும் நண்பர்கள். ஆனால், இருவரும் நண்பர்களாக இருப்பினும் அவ்வப்போது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நவீன், கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் ஆகியோர் லால்குடி மதுபான கடை அருகே குடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜா என்கிற கலைபுலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, தனியார் பள்ளி அருகே நவீன் குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த நவீன் குமார் ஆபத்தான நிலையில் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களால் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு திருச்சிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து, லால்குடி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

கலைப்புலி ராஜா

இந்நிலையில், இந்த கொலை வழக்கு சம்பந்தமாக ஆங்கரை பகுதியை சேர்ந்த கலைப்புலி ராஜாவின் நண்பர்களான ஸ்ரீநாத், பாலா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கலைப்புலி ராஜாவை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கலைப்புலி ராஜா மணச்சநல்லூர் அருகே மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடிக்க போலீஸார் விரைந்தனர். அப்போது, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற கலைப்புலி ராஜாவை காலில் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இந்நிலையில், “லால்குடி டாஸ்மார்க் அருகில் அமர்ந்து குடிமகன்கள் எப்போது மது அருந்துவதும், அங்கேயே தகறாரில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

கொலை நடந்த இடம்

மேலும், இந்த டாஸ்மாக்கானது லால்குடியின் குடியிருப்பு பகுதிகளில் அமைந்துள்ளதால் இந்த டாஸ்மாக்கை அகற்ற வேண்டும். இங்கு குடிக்கும் குடிமகன்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது” என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதனைத் தொடர்ந்து அந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை காலில் சுட்டு பிடித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.