UK General Election: `நன்றி ரிஷி சுனக்’ – தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மோடி ட்வீட் | Rishi Sunak

இங்கிலாந்தில் (Engalnd) தற்போது நடந்து முடிந்திருக்கும் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party), ஆட்சியிலிருக்கும் ரிஷி சுனக் (Rishi Sunak) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை (Conservative Party) வீழ்த்தி 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. மொத்தமாக 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட இந்தத் தேர்தலில், ஆட்சியமைக்க 326 இடங்கள் போதும் என்ற நிலையில், 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது தொழிலாளர் கட்சி.

கியர் ஸ்டார்மர் – ரிஷி சுனக்

2010 முதல் ஆட்சியிலிருக்கும் கன்சர்வேட்டிவ் கட்சி 120-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டும் வெற்றிபெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறது. இதன்மூலம், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை இழந்திருக்கிறார். தற்போது புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியின் தலைவர் கியர் ஸ்டார்மர் (Keir Starmer) இங்கிலாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்கவிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி, இங்கிலாந்து தேர்தலில் வெற்றிபெற்ற கியர் ஸ்டார்மருக்கு தனது வாழ்த்துகளையும், தோல்வியடைந்த ரிஷி சுனக்குக்கு நன்றியையும் தெரிவித்திருக்கிறார்.

கியர் ஸ்டாமர் (Keir Starmer)

இதுகுறித்து, மோடி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், “இங்கிலாந்து பொதுத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கியர் ஸ்டார்மருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-இங்கிலாந்து இடையே அனைத்து துறைகளிலும் பரஸ்பர வளர்ச்சி மற்றும் செழிப்பை ஊக்குவிக்கும் வகையில், விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்” என்றும்,

மோடி – ரிஷி சுனக்

“இங்கிலாந்தின் போற்றத்தக்க தலைமைத்துவத்திற்கும், தங்கள் பதவிக் காலத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவதற்கான தங்களின் தீவிர பங்களிப்புக்கும் நன்றி ரிஷி சுனக். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்” என்றும் ட்வீட் செய்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb