Ooty Racecourse: ரூ.822 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்! – பின்னணி என்ன?

ஊட்டியை கோடை வாசஸ்தலமாக கட்டமைத்த ஆங்கிலேயர்கள், பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களையும் உருவாக்கியுள்ளனர். ஊட்டி நகரின் மத்தியில் அமைந்துள்ள புல்வெளியில் குதிரை பந்தயத்தை நடத்தி வந்துள்ளனர். நாடு விடுதலை அடைந்த பின்னர் ஊட்டி நகராட்சியின் கீழ் வந்த குதிரை பந்தய மைதானத்தை, மெட்ராஸ் ரேஸ் கிளப் என்ற தனியாருக்கு குத்தகை அடிப்படையில் அனுபவம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.

ஊட்டி குதிரை பந்தய மைதானம்

குத்தகையை வழங்கிய மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், ஊட்டியில் குதிரை பந்தயங்களை நடத்தி வந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாக முறையாக குத்தகை செலுத்தாத நிலையில், அதை வசூலிக்கும் முயற்சியில் அரசுத்துறை சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குத்தகை விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குத்தகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும் என்றும், குத்தகை பாக்கியை செலுத்த தவறும் பட்சத்தில் அதனை கையகப்படுத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஊட்டி குதிரை பந்தய மைதானம்

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் வசம் இருந்த குதிரை பந்தய மைதானத்திற்கு அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். மேலும், இந்த நிலம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதற்கான அறிவிப்பு பதாகைகளையும் அமைத்துள்ளனர்.

இது குறித்து தெரிவித்த ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ், ” ஊட்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் அமைந்துள்ள சுமார் 52.34 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமான நிலம். மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயம் நடத்தி வந்தது. 2001 -ம் ஆண்டிலிருந்து முறையாக குத்தகை தொகை செலுத்தவில்லை.

ஊட்டி குதிரை பந்தய மைதானம்

மெட்ராஸ் ரேஸ் கிளப் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை பாக்கி ரூ.822 கோடியாக உயர்ந்தது. இது தொடர்பாக மெட்ராஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் குத்தகை பாக்கி செலுத்தாததால் நிலத்தை கையகப்படுத்துமாறு வருவாய்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் இன்று அந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb