ஈரோடு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு; ரூ.11 லட்சம் பறிமுதல்- அதிகாரி மீது வழக்கு பதிவு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 4-வது மாடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு பொறியாளராக கோவையைச் சேர்ந்த உதவி செயற்பொறியாளர் மோகன்பாபு என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள் தொடர்பான திட்டமிடல் மற்றும் கட்டுமானப் பணிகளின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது உதவி செயற்பொறியாளரின் முக்கியப் பணியாகும்.

அதேபோல கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு தகுதி நிர்ணய அங்கீகாரம் வழங்குவதும் இவரது பணியாகும். இந்நிலையில், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்தாரர்களிடமிருந்து டெண்டர்கள் விடப்பட்ட பணிகளுக்கான கமிஷன் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மோகன்பாபு

இதையடுத்து, ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜேஸ் தலைமையில் போலீஸார் அதிரடியாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் புகுந்து, நேற்று இரவு சோதனை நடத்தினர். அதிகாலை வரை நடைபெற்ற சோதனை முடிவில், மோகன்பாபுவிடமிருந்து ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb