பெண் சமையலர் தீண்டாமை வழக்கு: `நீதிமன்ற வளாகத்தில் மிரட்டல்’ – வழக்கறிஞர் ப.பா.மோகன் குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே அமைந்துள்ள திருமலைக்கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலராகப் பணியாற்றி வந்தவர் பாப்பாள். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி இப்பள்ளியில் படிக்கும் மாற்று சமூகத்துக்கு மாணவர்களுடைய பெற்றோர்கள், அவரை சமைக்க விடாமல் தடுத்து நிறுத்தியதோடு, பள்ளி வளாகத்தைப் பூட்டி கடும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பாப்பாளை சமையல் செய்யவிடாமல் தடுத்தவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை திருப்பூர் வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாப்பாளுக்கு ஆதரவாக ஆஜராகி உள்ள, சிறப்பு அனுமதியின்கீழ் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

செய்தியாளர் சந்திப்பு

அப்போது, அவர் பேசுகையில், “பாப்பாள் வழக்கில் வன்கொடுமை வழக்குகளுக்கான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான பயணப்படி,பாதுகாப்பு, மறுவாழ்வு என்ற எந்த உத்தரவாதமும் பின்பற்றப்படவில்லை. மாறாக நீதிமன்றத்திற்குள்ளேயே பாதிக்கப்பட்ட பாப்பாள் எதிர்தரப்பினரால் மிரட்டப்படுகிறார்.

எதிர்த்தரப்பினர் மீது புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் நீதிமன்றம் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவாக ஆஜராகி உள்ள வழக்கறிஞர் மற்றும் சிறப்பு அனுமதியின் கீழ் அரசு சார்பில் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் ஆகியோர் பணத்துக்காக வாதாடுவதாக அவதூறு பரப்பபடுகிறது. பாதிக்கப்பட்ட தரப்பில் எந்த மனு அளித்தாலும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

வழக்கறிஞர் ப.பா.மோகன்

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தலைமை நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்ல உள்ளோம்’’ எனத் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88