1950களில் நடிகராகவும் ஆங்கில இசையில் பிரபல இசைக்கலைஞராகவும் வலம் வந்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி.

அமெரிக்க மண்ணின் நாட்டுப்புற இசையும், நவீன இசையையும் சேர்த்து இவர் நடத்திய இசைக் கச்சேரிகள் அக்காலத்தில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக, நிற பாகுபாடுகளுக்கு எதிரான இவரது பாடல்கள் அமெரிக்கர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரது இசை நிகழ்ச்சியைப் பார்க்கக் குவிவார்கள்.

எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி

‘500 Miles’, ‘After Loving You’, ‘Any Day Now’, ‘I Want You, I Need You, I Love You’ போன்ற பாடல்கள் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி ஆல்பத்தில் இடம்பெற்ற பிரபல பாடல்களாகும். இவரது இசைத்தட்டுகள் அக்காலத்தில் லட்ச கணக்கில் விற்பனையாகி சாதனைப் படைத்தது.

இசைக்கலைஞராக மட்டுமின்றி நடிகராகவும் ஹாலிவுட்டில் 31 திரைப்படங்களில் நடித்துள்ளார். ‘Love Me Tender’, ‘Loving You’, ‘Jailhouse Rock’ உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. ஹாலிவுட்டில் இவருக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளம் உருவானது. 20ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற பிரபல இசைக் கலைஞர்களில் ஒருவரான இவர், ஆகஸ்ட் 16, 1977ம் ஆண்டு காலமானார்.

இதையடுத்து இவர் பயன்படுத்திய அணிகலன்கள், பொருட்கள் காட்சிப் பொருளாக ரசிகர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி பயன்படுத்திய ஷீவை, கடந்த வாரம் ‘henry aldridge auctioneers’ நிறுவனம் ஏலத்திற்காக வைத்திருக்கிறது. எல்விஸிலியின் தீவிர ரசிகர் ஒருவர் இந்த ஷூ-வை இந்திய மதிப்பில் ரூ.1.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்நிறுவனம், “ஜூலை 1ம் தேதி 1956ம் ஆண்டு ‘I Want You, I Need You, I Love You’ என்ற பாடலை மேடையில் பாடும்போது இந்த ‘blue suede’ ஷூவை அணிந்திருந்தார்.

அவருக்கு மிகவும் பிடித்த ஷு இது. அதனால், இந்த ஷூவை அவர் தன் நண்பர்களிடம் கொடுத்து பத்திரமாக வைக்கச் சொல்லியிருந்தார். கடைசிவரை அவர்கள் இந்த ஷுவை பாதுகாத்து வைத்திருந்தனர்” என்று பதிவிட்டுள்ளனர். சாதாரண பழைய ஷூவை ரூ.1.25கோடிக்கு வாங்கிய ரசிகரின் செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.