‘பிளஸ் 1 பொதுத்தேர்வு டு போதைப்பொருள் ஒழிப்பு’ – மாநிலக் கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் என்னென்ன?

கடந்த 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்” என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி ஓய்வு பெற்ற நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது அறிக்கையினை தயாரித்து முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கியது. அதில், “போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க, ஒவ்வொரு மாவட்டத்திற்கும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் தலைமையில், ஒரு மனநல ஆலோசகர், ஒரு சுகாதார அதிகாரி, ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரைக் கொண்ட தகுந்த வழிகாட்டுதல்களுடன் தனிக் குழு அமைக்கலாம்.

முதல்வர் ஸ்டாலின்

பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும். கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது. பிளஸ் 1 மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையில் தெரிவித்துள்ளதை போல மாணவர்கள் உயர்கல்வி பயில்கின்ற போதே படிப்பிலிருந்து பாதியில் வெளியேறி விட்டு மீண்டும் அதே படிப்பில் தொடரும் வழிமுறையை தமிழகத்தில் பின்பற்றக் கூடாது.

தேசிய புதிய கல்விக் கொள்கை முதலாம் ஆண்டு மட்டும் படித்துவிட்டு பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கிட வேண்டும். இரண்டாம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு டிப்ளமோ சான்றிதழும் மூன்றாம் ஆண்டில் வெளியேறினால் அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழும் வழங்கப்படும் என தேசிய கள்வி கொள்கை கூறுவது நிராகரிக்கப்படுகிறது.

ஐந்து வயது பூர்த்தியானால் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்.

பாடத்திட்டம் கல்வியை அன்றாட வாழ்க்கையுடன் இணைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் சுயமாக கற்றலை ஊக்குவிக்க வேண்டும்

மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டு மையங்களை ஒரே ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் கொண்டு வருவது முறையான நிர்வாகத்திற்கு அவசியம்.

“ஸ்போக்கன் இங்கிலீஷ்” தவிர “ஸ்போக்கன் தமிழ்” மீது முதன்மையாக கவனம் செலுத்த வேண்டும்.

தனியார் நிர்வாகங்களால் நடத்தப்படும் விளையாட்டுப் பள்ளிகள் / முன் தொடக்கப் பள்ளிகள் நர்சரிகள் / மழலையர் பள்ளி போன்றவற்றின் செயல்பாட்டைக் கண்காணிப்பதற்காக ஒரு விரிவான ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும்.

மாணவர்கள் 10-ம் வகுப்பில் பொது தேர்வுகளை எழுதும் வரை பள்ளி அளவில் மட்டுமே தேர்வுகள் இருக்க வேண்டும்.

கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள் மற்றும் முறையான பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட வேண்டும். மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் பயிற்சி முகாம்கள் மற்றும் விளையாட்டு/தடகள நிகழ்வுகளில் கலந்துகொள்ள திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி உறுதி செய்யப்பட வேண்டும்.

அரசு பள்ளி

அதேபோல், உயர்கல்வியில் (open book assessment) தேர்வுகளை புத்தகத்தின் உதவி கொண்டு எழுதுவதை அனுமதிக்கலாம்.

நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் விளம்பரப்படுத்துவதை தடை செய்ய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விரைவில் இந்த பரிந்துரைகளின் மீது அரசு கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88