லிஸ்ட் ரெடி; அறிவாலயத்தில் அரங்கேறப் போகும் அடுத்தடுத்த மாற்றங்கள்?

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கோவை ஆணையரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில் மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார் என்றாலும், “மேயர் கல்பனா ஆனந்த்குமார் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பணிகளில், தலைமை எதிர்பார்த்த அளவுக்குப் பணியாற்றவில்லை. அதுமட்டுமல்ல, மேயராகக் கல்பனா பொறுப்பேற்றதிலிருந்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் தொடர் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். ஒப்பந்ததாரர்களுடனும் ஒத்துப்போகவில்லை எனப் பல்வேறு புகார்கள் எழுந்தன. பல முறை தலைமைக்கு இவையெல்லாம் புகாராகச் செல்லவே, அறிவாலயத்தில் விசாரணையெல்லாம் நடந்தது. செந்தில் பாலாஜியின் சப்போர்ட்டால் தப்பித்து வந்தார். ஆனாலும் மேயர் மாறியதாகத் தெரியவில்லை. இதையடுத்து தலைமை, துறை அமைச்சர் மூலம் மேலும் மேலும் அவருக்கு எச்சரிக்கை கொடுத்ததோடு, பதவி பறிக்கப்படும் எனவும் எச்சரித்தது. ஆனாலும் அவரது செயல்பாடுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த ராஜினாமா கடிதத்தைத் தலைமை வாங்கி வைத்துக்கொண்டு தற்போது ராஜினாமா செய்யச் சொல்லியிருக்கிறது. அதையும் வேறு ஒருவர் மூலமாகவே கல்பனா தலைமைக்குக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்” எனக் கோவை மேயர் ராஜினாமா செய்ததற்கான காரணங்களை அடுக்குகிறார்கள், கோவை மாவட்ட தி.மு.க நிர்வாகிகள்.

மேயர் கல்பனா

கோவை மேயர் ராஜினாமா செய்ததை அடுத்து அறிவாலயத்தில் வலம் வந்தோம். மேயர் மட்டுமல்ல, இன்னும் சில மாற்றங்களும் இருக்கும் என்கிறார்கள். அது குறித்து விசாரணையில் இறங்கினோம்…

“நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றிய விதம், கட்சிக்காரர்களுடன் இணக்கமாக இருப்பது, அவர்மீது எழுந்த புகார்கள் உள்ளிட்டவை குறித்து தலைமை ஒரு பெரிய லிஸ்ட்டே தயார் செய்து வைத்திருக்கிறது.” எனப் பேசத் தொடங்கினார் சீனியர் அமைச்சர் ஒருவர். மேலும் தொடர்ந்தவர், “புகார்கள் எழுந்தவர்களில் முதலிடத்தில் இருந்த கோவை மற்றும் நெல்லை மேயர்களை மாற்றுவதாக முடிவு செய்து ராஜினாமா கடிதம் எல்லாம் வாங்கி வைத்திருக்கிறது. இவர்கள் மட்டுமல்ல மதுரை மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்கள்மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அவர்களை அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறது தலைமை. இவர்கள் மட்டுமல்ல, 13 முதல் 14 பேரூராட்சி தலைவர்கள், 7 நகராட்சித் தலைவர்களிடமும் கடிதம் வாங்கி வைத்திருக்கிறது தலைமை. இவர்கள் எல்லோருடைய பதவியும் அடுத்தடுத்து காலியாகும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவதற்குள் இவை ஒவ்வொன்றாக அரங்கேறும்.” என்றவர்…

ஸ்டாலின் | அண்ணா அறிவாலயம் | திமுக

“ஒவ்வொரு மண்டலத்திலும் லீஸ்ட் பெர்ஃமாமென்ஸில் இருக்கும் இரண்டு கவுன்சிலர்களிடமும் ராஜினாமா கடிதம் வாங்கி வைத்திருக்கிறார்கள். இவர்களையெல்லாம் அமைச்சர் நேரு அழைத்து எச்சரித்து அனுப்பியிருக்கிறார். இனியும் அவர்கள்மீது புகார் எழுந்தால், அவர்களது பதவி பறிக்கப்படும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb