மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக நேற்று இரவு சென்னை சென்ட்ரல் நோக்கி வந்துகொண்டிருந்த லோக்மண்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் `போதை மாத்திரைகள்’ கடத்திவரப்படுவதாக கோயம்பேடு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரக்கோணம் ரெயில் நிலையம் தொடங்கி, சென்ட்ரல் வரையுள்ள அடுத்தடுத்த ரெயில் நிறுத்தங்களையும் போலீஸார் `அலார்ட்’ செய்து கண்காணிப்புக்குள் கொண்டுவந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

அதுமட்டுமல்லாமல், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் நடமாட்டமுள்ள பகுதிகளில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரியும் இளைஞர்களை நோட்டமிட்டார்கள். அதற்கேற்ப, சென்ட்ரலில் இருந்து கோயம்பேட்டுக்கு வந்த பேருந்தில் இருந்து இறங்கிச்சென்ற இரண்டு இளைஞர்களைப் பிடித்து விசாரித்தபோது, போதை மாத்திரை கடத்திவந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் நான்குபேர் சிக்கினர். சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த ஹரிஷ், விஜயகுமார், அஜய், கோகுல், மாணிக்கம், ஒரு சிறுவன் என பிடிபட்ட இவர்களை கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 2,750 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

போதை மாத்திரைகள்

கிடுக்கிப்பிடியான விசாரணையில், பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. பிடிபட்ட இந்த கும்பல், மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து கல்லூரி மாணவர்களிடம் விற்பனைச் செய்து வந்ததும், இதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் குழுக்களை நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கடத்தல் கும்பலின் நெட்வொர்க்கை கண்டுபிடிக்க தீவிர விசாரணையில் இறங்கியிருக்கிறது போலீஸ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.