தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியரை தேர்வு செய்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழ்ங்குவதை கடந்த ஆண்டு நடிகர் விஜய் தொடங்கினார். விஜய் அரசியலுக்கு ஆயத்தமாகிவிட்டார் என அப்போதே பேசப்பட்டது. அதை உறுதிபடுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அதிகரப்பூர்வமாக தொடங்கி அறிவித்த விஜய் 2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

TVK விஜய்

இந்த நிலையில், இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவை, இன்றும், ஜூலை 3-ம் தேதியும் என 2 கட்டங்களாக கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 21 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கும் விழா சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

விஜய் அரங்குக்கு வந்தபோது ‘தளபதி தளபதி’ பாடல் ஒலிக்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த விஜய் மாணவர்களுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். நெல்லை மாவட்டத்தில் சாதிய கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

விழாவில் பேசிய விஜய், “மீண்டும் ஒருமுறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ மாணவிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி. இதுபோன்ற நிகழ்வுகளில் நல்ல சில விஷயங்களை சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும். அடுத்தக்கட்டப் படிப்புக்கு உங்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்யுங்கள். எந்த துறையில் தேவை இருக்கிறது என்பதை ஆய்வு செய்து அதை தேர்வு செய்யுங்கள். தமிழ்நாட்டில் உலகத் தரத்தில் டாக்டர் இன்ஜினியர் வக்கீல்கள் இருக்கிறார்கள்… ஆனால் நமக்கு நல்ல தலைவர்கள் இல்லை. நல்ல தலைவர்கள் என்பது அரசியலில் மட்டுமல்ல. அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை. நன்கு படித்தவர்கள் தலைவர்களாக வரவேண்டும். எதிர்காலத்தில் அரசியலும் ஒரு கேரியர் தேர்வாக ஏன் வரக்கூடாது. நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமா வேண்டாமா… அப்படியானால் அரசியலும் ஒரு கேரியராகா வரவேண்டும் என்பது என் விருப்பம். மாணவர்கள் தினமும் செய்திதாள் வாசிப்பதன் மூலம் படிக்கும்போதே அரசியலில் பங்கேற்கலாம். செய்திதாள் வாசித்தால் செய்தி வேறு, கருத்துருவாக்கம் வேறு என்பதை புரிந்துகொள்வீர்கள்.” என்றார்.

TVK விஜய்

தொடர்ந்து பேசியவர், “சமூக வலைதளங்களில் நல்லதை கெட்டதாகவும், கெட்டதை நல்லதாகவும் புறணி பேசி கருத்துருவாக்கம் செய்வதை கவனிப்பீர்கள். அனைத்தையும் பாருங்கள். அதில் எது உண்மை, பொய் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அப்படி தெரிந்து கொண்டாலே தற்போது ஒரு சில அரசியல் கட்சிகள் செய்யும் பொய்யான பிரசாரத்தை நம்பாமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் முக்கிய பங்களிப்பை உங்களால் செய்ய முடியும். ” என்றார்.

TVK விஜய்

தொடர்ந்து, “நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள். நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் தவறான பழக்கத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து வெளியேற்ற முயலுங்கள். நீங்கள் அதில் ஈடுபடாதீர்கள். ஈடுபடவும் கூடாது. உங்கள் அடையாளத்தை எப்போதும் இழந்து விடாதீர்கள். தமிழ்நாட்டில் தற்போது போதை பொருள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. எனக்கே அது அச்சமாகதான் இருக்கிறது. `போதைப் பொருளை கட்டுபடுத்த வேண்டியது அரசின் கடமை. தற்போது ஆளும் அரசு அதை தவறவிட்டுவிட்டது’ என்றெல்லாம் பேசுவதற்கான மேடை இதுவல்ல. சில நேரம் அரசை விட நமது பாதுகாப்பை நாம் தான் உறுதிபடுத்த வேண்டும். எனவே உங்களுடைய சுய ஒழுக்கம், சுயக் கட்டுபாடை வளர்த்து கொள்ளுங்கள். `Say no to temporary pleasure, Say no to Drugs’” என்று உறுதிமொழி எடுக்கவைத்தார்.

“இந்த உறுதிமொழியை எப்போதும் எடுத்து கொள்ளுங்கள். தோல்வியை கண்டு பயந்துவிடாதீர்கள். வெற்றி தோல்வி வாழ்வில் சகஜம். வெற்றி என்பது முடிவுமல்ல… தோல்வி தொடர்கதையுமல்ல.. வாழ்த்துகள்.” என்று முடித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு நடந்த விழாவில் அம்பேத்கரையும், பெரியாரையும் படியுங்கள் என மாணவர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கியது குறிப்பிடதக்கது.

நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு மதிய உணவாக சாதம், கதம்ப சாம்பார், வத்தக்குழம்பு, தக்காளி ரசம், மோர், உருளை காரக்கறி, அவரை மணிலா பொரியல், அவியல், இஞ்சி துவையல், ஆனியன் மணிலா, தயிர் பச்சடி, அப்பளம், வடை, வெற்றிலை பாயாசம் ஆகியவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.