Bihar `பட்டதாரிகளால் லீவ் லெட்டர்கூட எழுத முடியாதா?’- பஞ்சாயத் ஆசிரியர்களிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

பீகார் மாநில கல்வித்துறை, அரசியலமைப்பின் 309-வது பிரிவின் கீழ் அதிகாரங்களைப் பயன்படுத்தி, 2023-ம் ஆண்டு பஞ்சாயத்துகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கான விதிகளை உருவாக்கியது. அந்த விதிகளின்படி பீகார் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பஞ்சாயத்து ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை அறிமுகப்படுத்தியது.

உச்ச நீதிமன்றம்

இந்தத் தகுதித் தேர்விலிருந்து பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பரிவர்த்தங்கரி பிரரம்பிக் சிக்ஷக் சங்கம் தாக்கல் செய்த மனு, நீதிபதி பி.வி.நாகரத்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “நாட்டின் கல்வித் தரம் இப்படியா இருக்கிறது… முதுகலை பட்டதாரி ஆசிரியர் வேலை கிடைத்து, விடுப்புக்கு விண்ணப்பம்கூட எழுத முடியாத நிலை இருக்கிறதா… பீகார் போன்ற மாநிலம் இந்த முறையை மேம்படுத்த முயற்சித்து, இதற்கான தகுதித் தேர்வை நடத்தும்போது, ​​அதைக்கூட எதிர்க்கிறார்கள்.

தேசத்தை கட்டியெழுப்ப ஆசிரியர்கள் உதவுகிறார்கள். எனவே, இந்த திறன் சோதனைகளை உங்களால் எதிர்கொள்ள முடியாவிட்டால், நீங்கள் ராஜினாமா செய்துவிடுங்கள். இந்த வழக்கில் நான்கு லட்சம் பஞ்சாயத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒப்பந்த ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், எந்த ஆசிரியரும் பணியைத் தொடர முடியாது என்ற பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து, மாநில சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்” எனக் காட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb