Byju’s: பைஜூஸில் முதலீடு செய்த 49.3 கோடி டாலர் அம்பேல்… தவிக்கும் Prosus நிறுவனம்!

இந்தியாவின் மிகப் பெரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பைஜூஸ் (Byju’s). டச்சு முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் (Prosus) பைஜூஸ் நிறுவனத்தில் 9.6 சதவிகித பங்குகளைக் கொண்டிருந்தது. இதன் மதிப்பு 49.3 கோடி டாலர் (493 மில்லியன் அமெரிக்க டாலர்).

2019 முதல் இந்நிறுவனம் பைஜூஸில் 53.6 கோடி மதிப்புள்ள பங்குகளை கொண்டிருந்தது.   

இந்நிலையில் சமீபத்தில் வெளியான ப்ரோசஸ் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையில், பைஜூஸ் நிறுவன முதலீடுகளுக்கு மதிப்பு இல்லை என்பதால் பைஜூஸ் மீதான அதன் 9.6 சதவிகித பங்குகளை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

முதலீடு

“நிறுவனத்தின் நிதி ஆரோக்கியம், பொறுப்புகள் மற்றும் எதிர்காலக் கண்ணோட்டம் பற்றிய போதிய தகவல்கள் எங்களிடம் இல்லாததால், 2024 ஆம் நிதியாண்டின் இறுதியில் பைஜூஸின் பங்குகளை பூஜ்ஜியத்திற்கு குறைத்தோம்’’ என்று ப்ரோசஸ் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

அதேசமயம் ப்ரோசஸ் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களான ஸ்விக்கி, பார்ம்ஈஸி, PayU-ல் 700 கோடி முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்புகள் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.