சாலையில் கிடந்த யானை தந்தம்… சேஸிங் செய்த வனத்துறையினர் – சிக்கிய கடத்தல் கும்பல்!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக யானை தந்தம் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர். அப்போது துடியலூர் அருகே ஒரு ஜீப் சந்தேகத்துக்குரிய வகையில் வந்து, வனத்துறையினரின் வாகனத்தை இடித்துவிட்டு பன்னிமடை வழியாக செல்ல முயன்றது.

கைது செய்யப்பட்டவர்கள்

வனத்துறையினர் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினர். வாகனத்தில் வந்த ஒரு பெண் உள்ளிட்ட 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், நீலகிரி மாவட்டம், பிதர்காடு பழங்குடியினர் சங்கத்தின் செயலாளர் சங்கீதா தலைமையில் யானை தந்தம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவருடன் இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்,

கோவை

வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன், நாகமாநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த  அருள் ஆரோக்கியம், பாலமுருகன் ஆகியோரை கைதுசெய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் வனத்துறையினர் விரட்டியதில் தந்தத்தை சாலை ஓரமாக வீசிச் சென்றதாகத் தெரிவித்தனர். இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையம் அருகே சாலை ஓரத்தில் யானை தந்தம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர், அது நீலகிரியில் இருந்து கடத்தப்பட்ட தந்தம் என்பதை உறுதி செய்தனர்.

கைது

“தந்தத்தை யாருக்கு விற்பனை செய்ய இருந்தனர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விரைவில் கைதுசெய்வோம்” என கோவை வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb