ராப் பாடகராக ஆசை; நிதிச் சிக்கல்..! – துப்பாக்கிமுனையில் கார் ஓட்டுநரிடம் கொள்ளை; சிக்கியது எப்படி?!

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, டெல்லியின் ஸ்ரீனிவாஸ் பூரியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே ராஜ்வன்ஷ் என்பவர் ஓலா கார் புக் செய்திருக்கிறார். அதன் அடிப்படையில் ஓலா கார் டிரைவர் குல்பூஷன் ஷர்மா வந்திருக்கிறார். காரில் ஏறிய ராஜ்வன்ஷ், பேருந்து நிலையம் செல்லும்படி கேட்டுக்கொண்டார். டிரைவர் குல்பூஷன் ஷர்மா காரை வேகமாக இயக்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென துப்பாக்கியை எடுத்த ராஜ்வன்ஷ், டிரைவரை மாற்றுப்பாதையில் செல்லும்படி மிரட்டியிருக்கிறார்.

கார்

மேலும், அவரிடமிருந்த பணம், செல்போன் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு, காரிலிருந்து குதித்திருக்கிறார். குதிக்கும்போது துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது.

காயம் ஏதுமின்றி உயிர் தப்பிய குல்பூஷன் ஷர்மா, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை, அடையாளம் தெரியாத குற்றவாளி மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகள் 394 (கொள்ளை, தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 397 (இறப்பு அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் கொள்ளை ) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கார் புக் செய்த பதிவுகளின் அடிப்படையில் அழைப்பு விவரம் போன்ற கிடைக்கக்கூடிய ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அயோத்திக்கு அருகிலுள்ள பைசாபாத் நகரத்தில் வசிக்கும் ராஜ்வன்ஷ் எனக் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறை தேடுதல் வேட்டை நடத்தியதில் குற்றம்சாட்டப்பட்டவரை அயோத்தியில் கைது செய்தது.

இது தொடர்பான விசாரணைக்குப் பிறகு காவல்துறை, “ராஜ்வன்ஷ், டெல்லியின் துவாரகா மோரில் உள்ள தனது நண்பரின் வீட்டில் இருக்கும் தனது சாமான்களை எடுப்பதற்காக டெல்லிக்கு சென்றது தெரியவந்தது.

டெல்லி காவல்துறை

அப்போதுதான் அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மூலம் கொள்ளையடிக்க முயன்றிருக்கிறார். தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2022-ம் ஆண்டு பிடெக் பட்டம் பெற்ற ராஜ்வன்ஷ், ராப் பாடகராக வேண்டும் என்ற ஆசையில் டெல்லி வந்திருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட நிதிச் சிக்கல்களின் விளைவாகவே இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்” எனத் தெரிவித்திருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88